நீங்கள் அழகாக தெரிய வேண்டுமா?, அப்போது உங்கள் உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் உறுப்புக்களில் முக்கியமாக பற்கள், வெண்மையாக இருந்தால் தான் உங்கள் புன்னகை மற்றவரை ஈர்க்கும்.
பற்கள் வெண்மையாக இருக்கவே அனைவரும் விரும்புவர். ஆனால் உணவு பழக்கம் மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக பற்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே பற்களின் அழகை, வீட்டில் உள்ள சில பொருட்களைக்கொண்டு பராமரிக்கலாம்.இந்நிலையில், கடுகு எண்ணெய் மற்றும் உப்பைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யலாம். இந்த இரண்டு பொருட்களும் பற்களில் மஞ்சள் கறை, பல் சொத்தை, ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வீக்கம் போன்றவற்றை சரி செய்து விடும்.
பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது.
2.இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை அதிகம் உட்கொள்ளுதல்.
3.புகையிலை, பாக்கு போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவது.
4. இரசாயனங்கள் நிறைந்த தண்ணீரை கொதிக்க வைக்காமல் குடிப்பது.
5.பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகற்றாமல் இருப்பது.
பற்கள் மீது,கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து தேய்த்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்து ஈறுகள் சுத்தமாகும். உப்பு பற்களில் உள்ள கறைகளை அகற்றி வெண்மையாக்கி விடும். அத்தோடு ஈறுகளில் இரத்த கசிவு, வீக்கம் போன்றவற்றையும் சரிசெய்து விடும்.
கடுகு எண்ணெய்,ஒரு சிட்டிகை கல் உப்பைச் சேர்த்து கலந்து கொள்ளவும். தூள் உப்பு பயன்படுத்துவதற்கு முன் சூரிய ஒளியில் 3 மணி நேரம் வைத்திருந்து பின் பயன்படுத்தவும். உப்புடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பல் மற்றும் ஈறுகளில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்த பின்,வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து விடவும். சில நாட்களுக்கு இவ்வாறு செய்து வர பற்கள் சுத்தமாகவும், வெண்மை நிறத்திற்கும் மாறும்.