Muttai Kalakki recipe in tamil: ரோட்டு கடைகளிலும், நமது ஊர் புரோட்டா கடைகளிலும் கிடைக்கும் பிரபலமான சைடிஷ் ஆக "முட்டை கலக்கி" உள்ளது. ஹாஃப் ஆயில் போலவே சுருட்டி மடித்து இருக்கும் இந்த கலக்கிக்கு என தனி ரசிகர்களே உள்ளார்கள். இந்த அற்புத சைடிஷ் செய்வதில் சிலர் சிரமப்படுகிறார்கள். ஆனால், இதற்கான செய்முறை ரொம்பவே ஈஸியாகும்.
Advertisment
இப்போது முட்டை கலக்கிக்கான செய்முறை டிப்ஸ்களை பார்க்கலாம்.
முட்டை கலக்கி
முட்டை கலக்கி செய்யத் தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
முட்டை - 2 மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - சிறிது சிக்கன்/மட்டன் குழம்பு அல்லது சால்னா - 2 கரண்டி நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
முட்டை கலக்கி சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.
பிறகு அதில் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு அல்லது சால்னாவை இரண்டு கரண்டி ஊற்றிக்கொள்ளவும். மேலும் அதில் சிறிது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதன்பிறகு, ஒரு தோசை கல் எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, அதில் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும்.
இவை பாதி வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்து விடவும்.
நான்கு பக்கமும் மடித்து விட்டு மீண்டும் சிறிது மிளகுத்தூள், கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைத்து கீழே இறக்கினால் சூப்பரான முட்டை கலக்கி தயார்.
முட்டை கலக்கி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“