மட்டன் சுக்கான்னா இப்படி தான் செய்யனும்… என்ன ஒரு டேஸ்ட்டு!

village style Mutton Chops in tamil: மட்டன் சுக்கா செய்வதற்கான மிக எளிமையான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.

Mutton Sukka varuval in Tamil: Mutton Chops village style in tamil

 Mutton Sukka varuval in Tamil: நம்முடைய பாரம்பரிய உணவுகளில் மாமிச உணவு வகைகளும் ஒன்று. இந்த மாமிச உணவுகளில் ஆட்டுக்கறியில் செய்யப்படும் உணவுகள் மிகவும் பிரபலமானவைகளாக உள்ளன. அதிலும் ஆட்டுக்கறியில் செய்யப்படும் ப்ரைகளுக்கு மாமிச உணவு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

ஆட்டுக்கறியில் தயார் செய்யப்படும் குழம்புகளுக்கு எப்படி தனி டேஸ்ட் உள்ளதோ அதே போல்தான் இவற்றில் செய்யப்படும் ப்ரைகளுக்கும். இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் மட்டன் சுக்கா என்று அழைக்கப்படும் இந்த பிரபலமான சைடிஷ்க்கு தனிதத்துவமான டேஸ்ட் உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், இவற்றுக்கென சேர்க்கப்படும் மசாலாக்களை குறிப்பிடலாம்.

அப்படி என்னென்ன மசாலாக்களை இந்த சுக்கா ப்ரைக்கு சேர்க்க வேண்டும். இவற்றுக்கான எளிய செய்முறை தான் என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வேக வைக்க
ஆட்டுக்கறி – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு

மிளகு
சீரகம்
மல்லி
காய்ந்த மிளகாய்

சுக்கா வறுவல் செய்ய

நல்லெண்ணெய்
காய்ந்த மிளகாய்
பிரிஞ்சி இலை
பட்டை
சோம்பு
கருவேப்பிலை
சின்ன வெங்காயம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – சிறிதளவு
மிளகாய் பொடி
மல்லி பொடி
கல் உப்பு

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் நீங்கள் சுத்தமான தண்ணீரில் நன்கு அலசி வைத்துள்ள ஆட்டுக்கறியை (அ) மட்டனை எடுத்து, அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

இதற்கிடையில், மட்டன் சுக்கா செய்யத் தேவையான மசாலாவை செய்து விடலாம். அதற்கு மல்லி, காய்ந்த மிளகாய், சீரகம், இறுதியாக மிளகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து தனியாக ஆற வைத்துக்கொள்வோம். அவை ஆறிய பிறகு அவற்றை நொறுநொறுப்பாக அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்வோம்.

இப்போது சுக்கா வறுவல் செய்ய, ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய், பிரிஞ்சி இலை, பட்டை , சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை இட்டு கிளறவும்.

பிறகு தேவையான அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியிற் பிறகு சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மீண்டும் வதக்கவும். அதன் பின்னர் மிளகாய் பொடி, மல்லி பொடி, கல் உப்பு போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

இவை நன்கு கொதித்து வந்ததும் முன்னர் வேக வைத்த மட்டனை சேர்க்கவும். அவற்றை நன்கு கிளறி விட்டு சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். அவை சுண்டி வந்ததும் முன்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை மட்டன் மீது தெளித்து விடவும். பிறகு நன்கு கிளறி மீண்டும் சுண்ட விடவும். கீழே இறக்கும் போது அவற்றின் மீது கருவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை சேர்க்கவும்.

இப்போது நீங்கள் ஆவலோடன் எதிர்பார்த்த மட்டன் சுக்கா தயாராக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mutton sukka varuval in tamil mutton chops village style in tamil

Next Story
ருசியான அரைக்கீரை கடையல்; ஆரோக்கியமான ”லஞ்ச்க்கு” இதைவிட வேறென்ன வேணும்?Keerai kadayal recipe in Tamil: easy steps to make Arai keerai kadaiyal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express