ஒரு ஸ்பூன் தயிருடன்... மங்குவை மறைய வைக்க வீட்டு வைத்தியம்: டாக்டர் யோக வித்யா
முகத்தில் இருக்கும் கருமை திட்டுக்கள் ‘மங்கு’ என்பார்கள். இந்த நிற மாற்றம் நம் அழகையும், மனதையும் பாதிக்கக்கூடும். இந்தப் பதிவில் மங்கு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை நீக்க உதவும் எளிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
முகத்தில் இருக்கும் கருமை திட்டுக்கள் ‘மங்கு’ என்பார்கள். இந்த நிற மாற்றம் நம் அழகையும், மனதையும் பாதிக்கக்கூடும். இந்தப் பதிவில் மங்கு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை நீக்க உதவும் எளிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
ஒரு ஸ்பூன் தயிருடன்... மங்குவை மறைய வைக்க வீட்டு வைத்தியம்: டாக்டர் யோக வித்யா
முகம், கழுத்து, தோள்கள், கைகளில் பழுப்பு அல்லது லேசான கருப்பு நிற படைகள் போன்று படர்வதையே மங்கு என அழைக்கிறோம். இது ஒருவரின் சருமத்தில் பழுப்பு நிற படைகள் போல் இருப்பதால், சூரிய வெப்பத்தில் ஏற்பட்ட தழும்புகள் என பலரும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இதுபோல் மங்குகள் வருவதற்கு பலவித உடல்நலக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
மங்கு ஏன் வருகிறது?
மங்கு என்பது ‘மெலஸ்மா’ எனப்படும் ஒரு சரும நோயாகும். இது சருமத்தில் மெலனின் என்ற நிறமியின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. மெலனின் என்பது நம் சருமத்திற்கு நிறம் தரும் ஒரு நிறமி. இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். ஆனால், சில காரணங்களால் இந்த மெலனின் அதிகமாக உற்பத்தியாகி சருமத்தில் திட்டு திட்டாக கருமை நிறத்தை ஏற்படுத்துகின்றன.
சூரிய ஒளி: சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் மெலனோசைட்ஸை தூண்டி மெலனின் உற்பத்தியை அதிகபடுத்துகிறது. இதன் காரணமாக கோடை காலத்தில் வங்கு வருவது அதிகரிக்கும்.
Advertisment
Advertisements
வெப்பம்: புற ஊதாக் கதிர்கள் தவிர்த்து வெயிலின் தாக்கமும் வங்கு தாக்குவதை அதிகப்படுத்தும். அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் இருப்பது அல்லது அதிக வியர்வை வரும்படியான வேலைகளை செய்வதால் சருமத்தில் வங்கு வருவது அதிகரிக்கும்.
மரபணு: மரபணு ரீதியாகவும் வங்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவருடைய குடும்பத்தில் யாருக்காவது ம்ங்குப் பிரச்சனை இருந்தால், மற்ற நபர்களுக்கும் அதன் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
சூரிய ஓளியிலிருந்து பாதுகாப்பு: மங்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் சூரிய ஒளியிலிருந்து நமது சருமத்தை முதலில் பாதுகாக்க வேண்டும். சூரிய ஒளியிலிருந்தும் மோசமான புற ஊதாக் கதிர்களிலிருந்தும் பாதுகாக்க நல்ல அகலமான தொப்பி, சன் க்ளாஸ் மற்றும் உடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
மங்கு - வீட்டு வைத்தியம் :
2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் எடுத்து 12 மணி நேரம் நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அதனை பேஸ்ட் போல நன்கு அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கிளற வேன்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு லெமன் சேர்த்து மங்கு இருக்கக் கூடிய இடங்களில் தடவ வேண்டும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். முழுவதுமாக குணமாக ரத்த சுத்திகரிப்பு என்பது அவசியம். அதற்கு, அதிகாலை நெல்லிக்காய் ஜூஸ் அருந்த வேண்டும். இதனால், ஹார்மோர்ன் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு, முழுவதுமாக மங்கு மறைய வாய்ப்பு உள்ளது என்கிறார் மருத்துவர் யோக வித்யா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.