மனசோர்வுக்கும் உணவு தான் மருந்து… சாக்லேட் சாப்பிடுங்க ஹேப்பியா இருங்க!

கூடுதலாக, வெண்ணிலாவையும் மணம் பரப்ப செய்யலாம். இவை உடலில் செரட்டோனின் அளவை அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

By: Updated: February 10, 2020, 09:37:53 PM

மனசோர்வுடன் இருக்கிறீர்களா? மகிழ்ச்சியை தக்க வைக்க சில இயற்கையான வழிகள்
மகிழ்ச்சி என்பது ஹார்மோன்களுடன் தொடர்புடையது. அவற்றுக்கு சரியான உணவை நீங்கள் கொடுத்தால், உங்கள் வாழ்க்கையை அவை எளிதாக்கும்.   நீங்கள் என்ன உண்ண வேண்டும் என்று இது சொல்கிறது. உங்கள் ஆரோக்கியம், குறிப்பாக உங்கள் மன ஆரோக்கியம் பல்வேறு காரணிகளை சார்ந்ததாக இருக்கிறது. அதில் ஒன்றாக உணவு இருக்கிறது. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை விரும்புகின்றோம். ஆனால், மகிழ்ச்சி என்பது வெறுமனே மனம் சார்ந்தது மட்டும் அல்ல. நீங்கள் ஒவ்வொரு நாளும் இதற்காக திட்டமிட வேண்டும். மகிழ்ச்சி என்பது ஹார்மோன்களுடன் தொடர்புடையது. அவற்றுக்கு சரியான உணவை நீங்கள் கொடுத்தால், செரோ டோனின், டோபமைன் மற்றும் எண்டோர் பின்கள் போன்ற ஹார்மோன்கள் உங்கள் வாழ்வை எளிதாக்கும். எனவே, உங்கள் சமையலறைக்கான சில மகிழ்ச்சிகரமான உணவுகளை இங்கே குறிப்பிடுகின்றோம். மனம்சோர்வாக உணரும் நாட்களுக்கான உணவுகள் அவை.

To read this article in English

கருப்பு சாக்லேட் (Dark Chocolate)

மிகவும் வெளிப்படையான ஒன்றில் இருந்து தொடங்கலாம். சாக்லேட்கள், குறிப்பாக கருப்பு சாக்லேட்களை, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இல்லை என்று உணரும் போதெல்லாம் சாப்பிடலாம். கருப்பு சாக்லேட்டில் உள்ள காஃபின் என்ற பொருள் தூக்கத்தை தள்ளி வைக்கிறது. மேலும் வேலையில் கவனமாக ஈடுபடவு, உங்களை தயார்படுத்துகிறது. தவிர கருப்பு சாக்லேட்கள் அதிக அளவுக்கு ஆன்டிஆக்சிடென்ட்ஸ் கொண்டிருக்கிறது. அவை மனநிலையை மாற்றும் சக்திகளைக் கொண்டுள்ளன.

Natural ways to find happiness, Dark chocolate, Nuts and seeds, Salmon, Blueberries, aromatherapy, மகிழ்ச்சி தரும் உணவுகள், மனச்சோர்வு, டார்க் சாக்லேட், சால்மன் மீன், ப்ளூபெர்ரிஸ்,

பருப்புகள் மற்றும் விதைகள்

செரட்டோனின் என்பது ஒரு மகிழ்ச்சி ஹார்மோனாக கருதப்படுகிறது. இது உணர்வுகளை மற்றும் நினைவு ஆற்றலை முறைப்படுத்துகிறது. நீங்கள் உங்கள் இரைப்பை குடலுக்கு என்ன உணவு கொடுக்கின்றீர்களோ , அது நாளமில்லா சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், பருப்புகள் மற்றும் விதைகளில் விட்டமின் இ அதிக அளவுக்கு உள்ளது. விஷத்தன்மையுள்ள அழுத்தங்கள் உடலின் செல்களை பாதித்து முளை முதல் சுவாசம் வரை சிக்கலாக்கி விடும். விட்டமின் இ உள்ள பொருட்களை உண்ணும்போது இவை உடலின் செல்களைப் பாதுகாத்து எப்போதும் போல இயல்பாக இயங்க வைக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

சால்மன் மீன் வகை

மீன் உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. மீனில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்கள் தசைகள் தளர்வடையை, ஜீரண சக்திக்கு, ரத்த உறைவு, கருவுறுதல் ஆகியற்றுக்கு உதவுகிறது. எபிடெமாலஜி கம்யூனிட்டி ஹெல்த் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ள ஒரு மெட்டா பகுப்பாய்வில், அதிக அளவுக்கு மீன் உணவை உட்கொள்ளும் மக்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவது குறைகிறது என்பது தெரியவந்துள்ளது. கொழுப்பு அமிலம் உங்கள் உடலில் இயற்கையாக உற்பத்தி ஆகாது. எனவே, சால்மன் மீன் வகை உட்கொள்ளும்போது, உங்கள் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறீர்கள்.

Food background, sliced portions large salmon fillet steaks on chopping board on dark blue concrete table, copy space, top view.

ப்ளூபெரீஸ்

மகிழ்ச்சியாக இருப்பதன் ரகசியம் ப்ளூபெரீஸில் இருக்கிறது. இவை, மூளையின் ரத்த ஒட்டத்தை சீராக வைக்கின்றன. டோபமைன், செரட்டோனின் ஹார்மோன்கள் உடலில் சுற்றி வருவதை எளிதாக்குகின்றன. தவிர, ப்ளூபெரீகள் உயர்ந்த அளவு ஆன்டிஆக்சிடென்ட் கொண்டுள்ளன. எளிய கார்ப்ஸ் மற்றும் நார்சத்துகளைக் கொண்டுள்ளன. இவை உடலின் வீக்கத்தைக் குறைக்கும்.

இதர விஷயங்களையும் முயற்சிக்கலாம்

நறுமணப் பொருட்களை கொண்ட அரோமா தெரப்பியை முயற்சிக்கலாம். இதன் மூலம், உடலில் உள்ள சில செல்கள் ரத்தத்தில் உடனடியாக டோபோமைன், செரோட்டனை விடுவிக்கின்றன. இதனால், மன அழுத்தமும், பீதியும் குறைகின்றன. நீங்கள் சில லாவண்டர் ஸ்ப்ரிக் அல்லது தேவையான ஆயில்களை உபயோக்கலாம். கூடுதலாக, வெண்ணிலாவையும் மணம் பரப்ப செய்யலாம். இவை உடலில் செரட்டோனின் அளவை அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Natural ways to find happiness, Dark chocolate, Nuts and seeds, Salmon, Blueberries, aromatherapy, மகிழ்ச்சி தரும் உணவுகள், மனச்சோர்வு, டார்க் சாக்லேட், சால்மன் மீன், ப்ளூபெர்ரிஸ், Natural ways to find happiness, Dark chocolate, Nuts and seeds, Salmon, Blueberries, aromatherapy, மகிழ்ச்சி தரும் உணவுகள், மனச்சோர்வு, டார்க் சாக்லேட், சால்மன் மீன், ப்ளூபெர்ரிஸ்,

இந்த கட்டுரையை தமிழில் எழுதியவர் கே. பாலசுப்ரமணி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Natural ways to find happiness dark chocolate nuts and seeds salmon blueberries aromatherapy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X