navarathri golu decorations : நவராத்திரி என்றதும் நினைவுக்கு வருவது, வண்ணமயமான கொலு பொம்மைகள். சுவாமி சிலைகள் முதல் குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன் பொம்மைகள் வரை எல்லாமே ரசிப்பு தன்மையுடன் இருக்கும். வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வணங்குதலோடு தினம் சுமங்கலி பெண்களுக்கு உணவு படைப்பது செல்வத்தை அளிக்கும். புழுவாகவும், மரமாகவும் அவதரித்து மனிதனாகி இறுதியில் இறைவனடி சேர்வோம் என்பதுதான் நவராத்திரி கொலு சிறப்புகள்.
நவக்கிரகத்தின் அருளோடு நவராத்திரியில் வழிபடுவதை வலியுறுத்தும் விதத்தில் தான் ஒன்பது படிகளில் கொலு வைக்கும் தத்துவம் உருவானது.‘நவராத்திரி’ என்றால் ‘ஒன்பது நாள் இரவு’ என்று பொருள். ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’. ‘நவக்கிரகம்’ என்றால் ‘ஒன்பது கிரகம்’. எனவே நவக்கிரகத்தின் அருளோடு நவராத்திரியில் வழிபடுவதை வலியுறுத்தும் விதத்தில் தான் ஒன்பது படிகளில் கொலு வைக்கும் தத்துவம் உருவானது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோ ரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு.
மேலும் படிக்க : துவங்கியது நவராத்திரி… இந்த வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
Navarathri Golu Decorations : கொலு படியில் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டியவை
1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்).
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்).
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்).
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்).
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்).
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்).
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
ஒன்பது படிகள் இயலவில்லை எனில் ஒற்றை படை எண்களில் அமைக்கலாம்.கடைசி நாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம். மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர்கள் அதையும் கொண்டாட வேண்டும். அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும்.
மேலும் படிக்க : Navarathri 2019: பிரார்த்தனைக்கும் கொண்டாட்டத்திற்கும் சாப்பிடுவதற்குமான நவராத்திரி