முடிக் கொட்டுவது தொல்லை என நினைப்பதை விட அதில் இருக்கும் ஆரோக்கிய குறைப்பாட்டை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். எல்லா நேரத்திலும் முடி கொட்டும் என்பது உண்மையல்ல. எப்போது ஒருவரின் முடியின் வளர்ச்சி நிற்கும் தருவாயில் இருக்கிறதோ அப்போது முடி கொட்டுவது இருமடங்கு அதிகரிக்கிறது.
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. அதிக கெமிக்கல் உள்ள ஷாம்புகளை பயன்படுத்துவதும் முடி உதிர்வதற்கு ஒரு அடிப்படையான காரணம். ஒரு நாளைக்கு எவ்வளவு முடி உதிர்கிறது என்பதை பொறுத்தே, அது இயல்பானதாஅல்லது பிரச்னையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.
சரி அப்படி அளவுக்கு மீறி முடி கொட்டினால் அதை எப்படி தடுக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
1. தினமும் தலைக்கு குளிப்பதால் முடி கொட்டும் என்பதெல்லாம் தவறான கருத்து. மாறாக வெதுவெதுப்பான தண்ணீரில் தினமும் தலையை அலசுவது ஆரோக்கியத்தை தரும்.
2. முடிச்சிக்கல் ஏற்படாமல் இருக்க, பெண்கள் சீரம் தேய்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஆனால் அது நாளடைவில் கூந்தலை வறட்சிக்கு உள்ளாக்கும்.
3. தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. ஷாம்பூ போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும்.
4. உணவு பழக்கத்தில் கவனம் காட்டுவதும் மிகவும் அவசியமான ஒன்று. தினமும் ஒரு கீரை வகை, பேரிச்சம்பழம், வால்நட், பாதாம் பருப்பு போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்ல பயன் அளிக்கும்.
5. நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய் இவற்றை சம அளவில் எடுத்து, மஜாஜ் செய்து, ஒரு மணிநேரம் கழித்து தலைக்கு குளித்துவர, உடல் சூடு,முடி பலவீனம் ,ஆகிய காரணங்களால் முடி உதிர்வது தடைபடும்.