OATS ROTI Recipe in tamil: இன்றைய நாட்ட்களில் தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக சப்பாத்தி உள்ளது. இதற்கு காரணமாக இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்டு கூறலாம். ஏனென்றால், இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்க இவை உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்குகிறது.
Advertisment
அந்த வகையில் கோதுமை சப்பாத்தியை போன்றே ஆரோக்கியமான ஓட்ஸ் சப்பாத்தி எப்படி தயார் செய்யலாம் என்பதற்கான ஈஸியான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப் எண்ணெய் - 1 டீ ஸ்பூன் உப்பு
Advertisment
Advertisements
செய்முறை
முதலில் 1 கப் ஓட்ஸ் எடுத்து அதை மிக்சியில் வைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றை மாவு சலிக்கும் சல்லடை வைத்து மாவை தனியாக பிரித்துக்கொள்ளவும்.
இதற்கிடையில் அடுப்பில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளவும். அவற்றை கொதிக்க வைப்பதற்கு முன்னதாக எண்ணெய் மற்றும் தணண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
கொதிக்க வைத்த தண்ணீரை மாவுடன் கலந்து சப்பாத்திக்கு பிசைவது போல் ஒரு கரண்டியால் பிசைந்து கொள்ளவும். பிறகு அவற்றை 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மூடியால் மூடி வைக்கவும்.
பிறகு அவற்றை மீண்டும் நன்றாக பிசைந்து சப்பாத்தி உருண்டைகளாக பிடிக்கவும். பிடித்த உருண்டைகளை சப்பாத்தியாக சேய்த்து கொள்ளவும்.
அதன் பின்னர் சப்பாத்தி வேக வைக்கும் கல்லை சூடு செய்து ஒன்றன் பின் ஒன்றாக போட்டு எடுக்கவும்.
இப்படி நன்றாக வேக வைத்த சப்பாத்திகளுக்கு எப்போதும் தயார் செய்யும் உங்கள் விருப்பமான சைடிஷ்களோடு எடுத்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“