வெண்டைக்காய் என்றாலே சிலருக்கு பிடிக்காது. அதற்கு முக்கிய காரணம், வெண்டைக்காயின் வழவழப்பான தன்மை. ஆனால், வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் தெரிந்தால் யாரும் வெண்டைக்காயை வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள். அதனால், வெண்டைக்காயை இனி யாரும் தவிர்க்காதீர்கள். குறிப்பாக சுகர் பேஷியண்ட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
வெண்டைக் காய் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காய்களில் ஒன்று. ஆனால், பலரும் வெண்டைக்காயின் வழவழப்பான தன்மையால் அதை தவிர்க்கிறார்கள். ஆனால், அதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. வெண்டைக்காய் ஊட்டச் சத்து நிரம்பியதாக உள்ளது.
வெண்டைக்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழிகள்:
நீங்கள் வெண்டைக்காயை சேர்த்து செய்யக்கூடிய பல உணவுகள் உள்ளன. வெண்டைக்காயை தனியாகவோ அல்லது வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து காலையில் குடிக்கலாம்.
வெண்டைக்காய் தோலை அரைத்து அப்படியே உட்கொள்ளலாம்.
பொடி செய்யப்பட்ட வெண்டைக்காய் விதைகளை எடுத்து அல்லது விதைகளை அரைக்கும் முன் உலர்த்தி பயன்படுத்தலாம். பொடி செய்யப்பட்ட வெண்டைக்காய் விதைகள் நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் ஒரு துணைப் பொருளாகக் கூறப்படுகிறது.
அதனால், இனி வெண்டைக்காயை யாரும் தவிர்க்காதீர்கள். குறிப்பாக, சுகர் பேஷியண்ட்ஸ் முக்கியமாக கவனத்தில் கொண்டு வெண்டைக்காயை சாப்பிட்டு பலனடையுங்கள்.
வெண்டைக்காய் வைட்டமின் சி மற்றும் கே 1 இன் சிறந்த ஆதரமாக உள்ளது. வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து. ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது. அதே சமயம் வைட்டமின் K1 கொழுப்பை கரைக்கக்கூடிய வைட்டமின். இது இரத்த உறைதலில் பங்களிப்புக்காக அறியப்படுகிறது.
வெண்டைக்காயில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. சிறிது புரதமும் நார்ச்சத்தும் உள்ளது. பல பழங்களிலும் காய்கறிகளில் புரதம் இல்லை. அதனாலேயே, வெண்டைக்காய் ஓரளவு தனித்துவமானதாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“