tejas express chennai to madurai timings : மே மாதம் தொடங்கவதற்குள்ளே வெயில் தாக்கம் அதிகமாகிவிட்டது. சென்னை வாசிகள் பலரும் வெயிலுக்கு பயந்து குளிர் நகரங்களை தேடி செல்ல ரெடியாகி வருகின்றன. பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்தவுடன் அனைவரும் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த வகையில் நம்மில் பலருக்கும் குளிர் நகரம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது கொடைக்கானல் தான். ஏற்கனவே கொடைக்கானல் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்கள் இந்த தகவலை கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
இனிமேல் தான் பிளான் செய்ய இருப்பவர்கள் இந்த தகவலை படித்த பின்பு முடிவு செய்யுங்கள்.
தேஜஸ் அதிவேக விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த தேஜஸ் ரயிலானது சென்னை-மதுரை இடையேயான 495 கி.மீ தூரத்தை வெறும் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் இணைக்கிறது.
இந்தியாவின் அதிவேக விரைவு குளிரூட்டப்பட்ட ரயிலான தேஜஸ் மதுரை – எழும்பூர் இடையே தனது சேவையை தொடக்கிவுள்ளது.
200 கி.மீ வேகத்தில் இயங்கக் கூடிய இந்த ரயில் தொடக்கத்தில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வாரத்துக்கு ஐந்து நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தை ஆறரை மணி நேரத்தில் சென்று சேர்ந்துவிடுகிறது. அதன்பிறகு அன்று இரவு மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து சேருகிறது.
சென்னை-மதுரை இடையே பயனிக்கும் தேஜஸ் சொகுசு ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். ஆக கொடைக்கானல் செல்ல நினைப்பவர்க்ளுக்கு தேஜஸ் அறிமுகம் ஒரு வரப்பிராசதம் தான்.
இதில் ஏசி வசதி, உணவு வசதி, கழிப்பறை வசதி, வைஃபை வசதி, சிசிடிவி கேமரா கண்காணிப்பு, அசதி இல்லாத பயணம், ஏறி அமர்ந்தால் போதும் வெறும் 6 மணி நேரத்தில் கொடைக்கானல் சென்றடையலாம் என தேஜஸ் ரயிலானது உங்கள் பயணத்தை மேலும் மேலும் எளிதாக்குகிறது.
அதே போல் கொடைக்கானல் சுற்றுலாத்துறை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அளித்திருக்கும் தகவலின் படி சென்னையில் இருந்து அதிகமானோர் வார இறுதி நாட்களில் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.
தேஜஸ் விரைவு ரயில் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
ஆம்னி பஸ்கள்:
அதே நேரம், தேஜஸ் ரயிலின் அறிமுகத்தால் ஆம்னி பஸ்களின் மவுசு குறைந்து விட்டதாக ஒரு பக்கம் செய்திகள் உலா வருகின்றன. இதுக்குறித்த உண்மையை திருச்சியை சேர்ந்து ஆம்னி பஸ் நிறுவனரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறிய பதில் இதுதான்.. “அதெல்லாம் வதந்தி மட்டுமே. தேஜ்ஸ் அறிமுகத்திற்கு பின்பு ஆம்னி பஸ்களை நாடி வரும் பயணிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
எப்போதுமே புதியதாக எதாவது அறிமுகமானல் அதில் சென்று அதன் அனுபவம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் பழக்கமாக இருக்கும். அதுப்போல தான்ப் தேஜஸ் ரயிலில் கடந்த 1 வாரமாக அதிகப்படியானோர் சென்று வந்தனர். ஆனால் உண்மையில் மிடில் கிளாஸ் மக்களின் தேர்வு ஆம்னி பஸ்கள் தான். டிக்கெட் விலையில் சரி, பயணத்திலும் சரி” என்று கூறியுள்ளார்.