விட்டமின்கள் மிகுந்த வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது?

onion skin benefits : உதட்டில் உள்ள கருமையை அகற்றி மீண்டும் இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டு வரமுடியும்.  

வெங்காயம் இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

வெங்காயத்தின் நன்மைகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு காஸ்மடிக் சர்ஜரி மருத்துவர் அனுப் திர் ( Senior Cosmetic and Reconstructive Surgeon at A+ Medi Art ) கூறுகையில்;

வெங்காயம் ஃபிளாவனாய்டு மூலக்கூறுகள் , வைட்டமின்கள் ஏ, சி, ஈ போன்ற ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். இதனால், தோலின் நிறம் கருத்தல், முகச்சுருக்கங்கள் வேனிற்கட்டிகள் போன்ற புற ஊதாக்கதிர் பாதிப்புகளில் இருந்து பாதுக்கப்பு கிடைக்கிறது.  வெங்காயத்தில் உள்ள குர்செடின் (Quercetin) ஃப்ரீ ரேடிக்கல்ஸ்க்கு எதிராக போராடுகிறது. இது, தேவையற்ற வயது முதிர்ச்சி அறிகுறிகளைத் தவிர்க்கிறது.

வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகின்றன.  இதனால் உங்கள் சருமம் தெளிவாக இருக்கும்.

தோல் பராமரிப்பை பேணி காக்க  சானிட்டைசர் , எக்ஸ்ஃபோலியேட், டோனர், முககவசங்களைப்  பயன்படுத்துகிறோம். இருப்பினும், வெங்காயத்தில் செல் சேதத்தைத் தடுக்க இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வெங்காயம் சரும அழகை நன்றாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

வெங்காயம் இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது.  தோல் ஒளிரும் பண்புகளும் உள்ளன! ஆனால், தோலில் வெங்காய சாறை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது உங்கள் மென்மையான தோலில் கடுமையானதாக இருக்கும்.

ஒரு டீஸ்பூன் வெங்காய சாறு, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு,  1/2 டீஸ்பூன் பால் கிரீம் கலந்து பூச வேண்டும். இதனை, அடுத்த நான்கு வாரங்களுக்கு ஃபேஸ் பேக்காகவும்  பயன்படுத்தலாம்.

Keep onion handy for skin benefits

வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் வெங்காய சாற்றை கலந்து, இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் உங்கள் இருண்ட உதடுகளுக்கு மேல் தடவவும். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து இதைச் செய்தால் உதட்டில் உள்ள கருமையை அகற்றி மீண்டும் இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டு வரமுடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Web Title: Onion health benefits onions are natural cleansers onion skin lightening properties

Next Story
வேப்பிலை, சீயக்காய் தரும் அழகு: சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ லைஃப்ஸ்டைல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com