Hair Loss: விரிவான ஆராய்ச்சிகள் இல்லை என்றாலும், வெங்காய சாறு, முடி உதிர்தலை தடுப்பதற்கான / முடி மீண்டும் வளருவதற்கான கருவியாக மிகவும் பிரபலமாகிவிட்டது. முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த இது பல ஆண்டுகளாக வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்தப்படுகிறது. வெங்காய சாற்றில் உள்ள முக்கிய மூலப்பொருளான கந்தகம் (sulphur) அழகு தாது, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது என அறிவியல் நிரூபித்துள்ளது. வெங்காய சாறு மைக்ரோ ஊட்டச்சத்துக்களான வைட்டமின் C, folate, வைட்டமின் B6, மற்றும் பொட்டாசியம் (potassium) ஆகியவற்றை வழங்குகிறது, என மும்பையை சேர்ந்த தோல் மற்றும் அழகியல் மருத்துவர் Dr Pallavi Sule எளிதாக கிடைக்ககூடிய இந்த வீட்டு வைத்தியத்தின் நன்மைகள் மற்றும் விரைவான பயன்பாடுகள் குறித்து விளக்கும் போது தெரிவித்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
”வெங்காய சாறில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முடி மற்றும் உச்சந்தலையில் வெங்காய சாற்றைப் தேய்ப்பதால் மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதனால் முடி வளர்ச்சி மேம்படுகிறது. வெங்காய சாறு முடி முன்கூட்டியே நரைப்பதையும் தாமதப்படுத்துகிறது (இதை உறுதிப்படுத்த எந்த ஆய்வும் இல்லை என்றாலும்). மயிர்க்கால்களில் enzyme catalase உற்பத்தி செய்யப்படுவதே இதற்குக் காரணம்”, என Sule விளக்குகிறார்.
சாப்பிடுவது மற்றும் தேய்ப்பது
முடி வளர்ச்சியை குறித்து நாம் குறிப்பாக பார்ப்பதால், உட்கொள்வதை விட, மேற்பூச்சு விரும்பிய முடிவைக் கொடுக்கலாம். வெங்காய சாறு சேர்க்கப்பட்ட கிரீம்கள், ஹேர் ஆயில்கள், ஷாம்புகள் போன்ற பல சேர்க்கைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் செயல்திறனை மருத்துவ பரிசோதனைகளால் மட்டுமே தீர்மானிக்க முடியும், எனவே ஒருவர் தயாரிப்பை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். தேவைக்கு அவ்வப்போது சிறிய அளவில் வெங்காய சாறை எடுப்பது நல்லது. பெரிய அளவில் தயாரிப்பதை தவிர்க்கலாம்.
வெங்காய சாறை எவ்வாறு தயாரிப்பது
வெங்காயத்தை நறுக்கி அதை அரைத்துக் கொள்ளவும். துணியைப் பயன்படுத்தி அதை நன்றாக வடிக்கட்டி சுத்தமான காய்ந்த பாத்திரத்தில் வைத்து குளிரூட்டவும்.
மனதில் வைக்க வேண்டிய குறிப்புகள்
யாருக்கெல்லாம் வெங்காயம் ஒவ்வாமையை தருமோ அவர்கள் வெங்காய சாறை தலையில் தேய்க்க வேண்டாம்.
வெங்காய சாறை தலையில் தேய்க்கும் போது எரிச்சலை ஏற்படுத்தும் அதனால் அதை கற்றாழை/ தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.