ஆரோக்கியமான உணவுகளைத் தேடும் நமது பயணமானது முடிவற்ற தேடலாகும். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைப்பதற்கும் நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உணவுகளைச் சேர்க்கிறோம். ஆனால், இந்த பணிகளை நமது சமையல் அறையில் தினமும் பயன்படுத்தும் வெங்காயம் செய்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் அனைத்து விதமான உணவு தயாரிப்பதிலும் வெங்காயம் அடிப்படையாக பயன்படுத்தும் ஒன்றாகும். அவை எப்போது உங்கள் சமையலறையில் நீங்கா இடம் பிடித்திருக்கும். நீங்கள் தேடாமல் உங்களின் அனைத்து விதிமான தேவைகளை பூர்த்தி செய்யும் பானமான வெங்காயச் சாறு விளங்குகிறது.
Advertisment
மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயச் சாறு பலன்கள் மற்றும் செய்முறைகள் குறித்த செய்திதொகுப்பு
உடல் எடையை குறைக்கும் வெங்காய ஜூஸ் வெங்காயத்தில் கொழுப்பு இல்லையென்றாலும், மெட்டோபாலிசத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற ஃபிளாவனாய்டுகள் நிரம்பியுள்ளன. இவை எடை இழப்புக்கு உதவுகிறது. வெற்று வயிற்றில் வெங்காயம் மற்றும் தேன் குடிப்பது உடலில் கூடுதலாக சேரும் கொழுப்பை அகற்ற உதவும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்முறை: அரை வெங்காயத்தை உரித்து நறுக்கி, தண்ணீரில் நன்கு கலக்க வேண்டும். பின்னர், 1 தேக்கரண்டி தேனைச் சேர்த்து காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காயச் சாறு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பல விதமான உணவுகளை தேடுவது காட்டிலும் வெங்காயம் சிறந்த தேர்வாகும். வெங்காயத்தில் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், சளி, இருமல், காய்ச்சலுக்கு எதிராகப் போராட நமது உடலில் சக்தியை அதிகரிக்க உதவும் பைட்டோ கெமிக்கல்கள் இடம்பெற்றுள்ளது.
செய்முறை ஒரு வெங்காயத்தை உரித்து நறுக்கி, ஒரு கிளாஸில் குடிநீர் நிரப்பிவிட்டு ஒர் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர், காலையில் இந்த தண்ணீரை ஒரு சிப் குடிக்கலாம். அதனை தொடர்ந்து, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேர இடைவெளியில் நாள் முழுவதும் தொடர்ந்து குடிப்பது நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்.
தோல் மற்றும் முடிக்கு சிறந்த வெங்காயச் சாறு வெங்காயம் சாறு, முடி மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். அதனை தோல் மற்றும் கூந்தலில் தடவுவதைத் தவிர, வெங்காய சாறு தொடர்ந்து குடிப்பது முடி உதிர்தல், வீக்கம் மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளுக்குப் பல அற்புதங்களைச் செய்திடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
செய்முறை வெங்காயத்தின் ஒரு துண்டை கையில் பிடித்துக்கொண்டு அழுத்து சாற்றை பிழிந்து எடுக்க வேண்டும். அந்த சாற்றை, மீதமிருக்கும் வெங்காய துண்டுகளின் மேல் ஊற்றி, அதனைச் சேகரித்து கொண்டு, குடித்திட வேண்டும்.
வெங்காயத்தின் வாசனை அல்லது சுவை உங்களுக்கு அதிகமாக தெரிந்தால், உப்பு அல்லது எலுமிச்சை சாறு சேர்ப்பது உதவலாம். நல்ல தோல் மற்றும் கூந்தலுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எடை இழப்புக்கு உதவவும் இந்த வெங்காயச் சாறு சமையல் குறிப்புகளை நீங்கள் முயற்சிக்கவும். நிச்சயம், இதை பின்பற்றுவதனால் ஏற்படும் பலன்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.