உங்கள் குழந்தைக்கு டிஸ்னி பிடிக்குமா? அப்படியெனில் இந்த டிராயிங் வகுப்புகள் நிச்சயம் பிடிக்கும்

வீடியோவைப் பார்த்து, ஒரு தொழில்முறை நிபுணரைப் போல நீங்கள் அவரை வரையலாம்.

By: April 15, 2020, 10:58:10 AM

வீட்டிலிருப்பது சலிப்பாக இருக்கிறது என்று யார் சொன்னார்கள்? சில விஷயங்களில் உங்கள் பிள்ளையை மணிக்கணக்கில் மூழ்கடிக்கலாம். நீங்கள் இப்போது உங்கள் வீட்டிற்கு டிஸ்னி மந்திரத்தை லைவாக கொண்டு வரலாம். சமீபத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இலவச வரைதல் / டூட்லிங் வகுப்புகளின் பட்டியலைத் தொகுத்துள்ளது டிஸ்னி. இந்த வகுப்புகள் அனைத்தும் டிஸ்னி கேரக்டர் கலைஞர்களால் எடுக்கப்படுகின்றன. எனவே வீட்டிலிருந்தபடியே, சிறந்த கைகளிலிருந்து கற்றுக்கொள்ள உங்களுக்கு ஓர் நல்வாய்ப்பு உருவாகியுள்ளது.

முதல்வர், துணை முதல்வரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: கொரோனா பரிசோதனையில் பாஸிட்டிவ் ரிசல்ட்

உங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மிக்கி மவுஸ், ஜீனி, ஓலாஃப் போன்றவை, இந்த ஒர்க்‌ஷாப்பில் லைவாக வரலாம். வகுப்புகள் எந்த நேரத்திலும் 10 முதல் 20 நிமிடங்களுக்கு நீடிக்கும். இதற்கு ஒரு ஸ்கெட்ச் புத்தகம், பென்சில் மற்றும் அழிப்பான் மட்டுமே தேவை. இதன் மூலம், உங்கள் பிள்ளை நேரத்தை வளமாகப் பயன்படுத்த முடியும். நீங்களோ பள்ளி நேர ஏக்கத்துடன் சிறிது நினைவுகளை அசைப்போடலாம்.

வால்ட் டிஸ்னியின் சொந்த மற்றும் அசல் பதிப்பை எவ்வாறு வரையலாம் என்பதை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

இதுவும் ஒரு உன்னதமான பாத்திரம். இதை எப்படி வரைய வேண்டும் என்பதை அறிய விரும்புகிறீர்களா?

அலாடினின் ஜீனி அனைவருக்கும் பிடித்தவர். இந்த வீடியோவைப் பார்த்து, ஒரு தொழில்முறை நிபுணரைப் போல நீங்கள் அவரை வரையலாம். பின்னர், உங்கள் குளிர்சாதன பெட்டியில், படுக்கையறை ஜன்னலில் என விரும்பிய இடங்களில் அவரை ஒட்டலாம்.

வீட்டிலேயே மது தயாரிப்பது எப்படி? கூகுளை திணற வைத்த நெட்டிசன்கள்

மேற்கூறிய கதாபாத்திரங்களைத் தவிர, டிஸ்னி அதன் பல இளவரசிகளை, எவ்வாறு உயிர்ப்பிப்பது என்பதையும் உங்களுக்குக் கற்பிக்கிறது. ராபன்ஸல் முதல் ஜாஸ்மின் மற்றும் ஸ்னோ ஒயிட் வரை, இந்த பயிற்சிகளை யூடியூப்பில் காணலாம்.

 

ஸோ, எந்த டிஸ்னி கதாபாத்திரத்தை இன்று உங்கள் குழந்தையை வரைய வைக்கிறீர்கள்?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Online drawing classes for kids disney characters

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X