நேற்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி," இந்தியாவில் பொதுமுடக்கம் மே 3 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக அறிவித்தார். மேலும், தற்போது நாம் கடைபிடித்து வரும் ஒழுக்கத்தைத் தொடர்ந்து மே 3 வரை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இது ஒருபுறம் இருக்க, கள்ள சந்தைகளில் மதுபானங்களின் விலைகள் பல மடங்குகளாக அதிகரித்துள்ளன. 150, 170 ரூபாய்க்கு விற்று வந்த விஸ்கி பாட்டில் தற்போது 700, 800 ரூபாயாக உயர்ந்துள்ளது. எவ்வாராயினும், கடுமையான காவல்துறை கண்காணிப்பு காரணமாக கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்க பலர் தயக்கம் காட்டவும் வருகின்றனர்.
இதன் விளைவாகவோ என்னவோ,"வீட்டிலேயே மது தயாரிப்பது எப்படி" என்ற கூகுள் தேடல் நாளுக்கு நாள் முக்கியத்துவம் வருகிறது.
தமிழ்நாட்டில், ,'வீட்டிலேயே மது தயாரிப்பது எப்படி?' என்ற 30 நாட்களுக்கான கூகுள் ட்ரெண்ட்டை மேலே உள்ள விளக்கப் படத்தில் காணலாம்.
'வீட்டிலேயே மது தயாரிப்பது எப்படி?' என்ற கடந்த 30 நாட்களுக்கான ஒட்டு மொத்த இந்தியாவின் கூகுள் ட்ரெண்டை மேலே உள்ள விளக்கப் படத்தில் காணலாம்.
மதுபோதைக்கு அடிமையானவர்களை, குடிகாரர்கள் என்று இழிவாக கூறுவதற்காக இந்த விளக்கப்படத்தைக் காட்டவில்லை.மாறாக, இந்தியாவில் மதுப்பழக்கம் எவ்வளவு , ஆழமாக கூகுள் ட்ரெண்டில் பதிவு செய்யும் அளவிற்கு உள்ளது என்பதைக் எடுத்துக் காட்டுவதற்கு முயல்கிறோம்.
கடந்த, வாரத்தில் கூட இன்ஸ்டாகிராம் மூலம் மது விற்பனை செய்த ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்திருந்தார். பெங்களூரில் உள்ள விஜயநகரைச் சேர்ந்த, இவர் கூகிள் மேப் உதவியோடு தனது வாடிக்கையாளர்களுக்கு மது விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆர்டர்களை டெலிவரி செய்ய வரும் போது, கலால் துணை ஆணையர் (மேற்கு மண்டலம்) பி.ஆர்.ஹிரேமத் மற்றும் இன்ஸ்பெக்டர் வனஜாக்ஷி தலைமையிலான குழுவால் கைது செய்யப்பட்டார்.
மேலும், வாசிக்க:
தமிழகத்தில் மரணிக்கும் மது நோயாளிகள்: தீர்வு என்ன?
அன்றாட அளவு மதுபானத்தைப் பெறாத பலர் Withdrawal symptoms-ஐ காட்டுகின்றனர்.
குளிர்பானத்தில் ஷேவிங் லோஷன்: புதுக்கோட்டையில் 2 மீனவர்கள் மரணம்