மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் லாக் டவுனில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் live : இந்தியாவில் நடைபெற இருந்த ஃபிஃபா U-17 மகளிர் உலகக்கோப்பை ஒத்திவைப்பு
அதிலும் குறிப்பாக அத்தியாவசிய தேவைகளான மளிகை மற்றும் காய்கறி கடைகள், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இயங்குகின்றன. மக்கள் கூடுவதை தவிர்க்க, இந்த மாதிரி விஷயங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனால் மது அருந்தும் பலர் செய்வதறியாது இருக்கிறார்கள்.
இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்வர் ராஜா. இவர் பைக் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பு பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டி. இவர் கோட்டை பட்டினத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். அவரது நண்பர் அசன் மைதீன் இவரும் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். மேற்கூறிய மூன்று பேரும் நண்பர்கள் என்பதால் தினமும் இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால், மது கிடைக்காமல் இந்த மூன்று நண்பர்களும் மிகவும் அவதி பட்டதாக தெரிகிறது. ஆகையால் சேவிங் லோஷனை வாங்கிச் சென்று, அதை சோடாவுடன் கலந்து குடித்துள்ளார்கள். குடித்த கொஞ்ச நேரத்தில் மூன்று பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இந்த மூன்று பேரையும் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதில் சிகிச்சை பலனின்றி அருண்பாண்டியன், அசன் மைதீன் உயிரிழந்துள்ளார்கள்.
ரேஷன் கடைகளில் தள்ளுமுள்ளு: நிவாரணம் ரூ1000-ஐ வீடு வீடாக வழங்க அரசு முடிவு
உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அன்வர்ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோட்டைப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”