இந்த கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் நமது ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதைத் தவிர, நாம் உண்ணக்கூடிய உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆக்ஸிஜனேற்றம் மிகுந்த உணவுகள் நம் உடலில் ஆக்சிஜன் அளவை பராமரிக்க உதவுகின்றன. நம் உடலில் ஆக்ஸிஜன் செறிவூட்டலை மேம்படுத்தும் ஒரு உணவு நோய்களுக்கு எதிராக உடலின் பாதுகாப்பு செயல்முறையை மேம்படுத்துவதற்கும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், நமது செல்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இரும்பு மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள்
உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் சப்ளை அதிகரிக்க இரும்பு மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் முக்கியம். பீட்ரூட், இலை காய்கறிகள், மாதுளை, பூண்டு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், இறைச்சி, பருப்புகள் மற்றும் விதைகள் ஆகியவற்றில் இரும்பு நைட்ரேட்கள் அதிக அளவில் உள்ளது.
நல்ல நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், செல்கள் சுவாசிக்க வேண்டும், நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது, நம் உடல் அனைத்து உயிரணுக்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. நைட்ரேட்டுகள், இரும்பு, ஃபோலிக் அமிலம், பி 12 நிறைந்த உணவுகள் இரத்தத்தில் இரும்புச்சத்தை முழுமையாக ஒருங்கிணைக்க உதவுகின்றன. அமிலத்தன்மை நிறைந்த ஆன்டாக்சிட்களைப் பயன்படுத்துவதை தவிருங்கள். இது இரும்பு உறிஞ்சுதலை தாமதப்படுத்துகிறது. ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும் உணவுகளை எடுத்துக் கொள்வது உடலில் ஆக்ஸிஜனை அதிகரிப்பதை மேம்படுத்துகிறது. இறைச்சியில் உள்ள ஹீமோகுளோபின் இரும்பு, உடலில் இரும்பு அளவை மேம்படுத்த உதவுகின்றன.
தாவர உணவுகளில் ஹீமோகுளோபின் அல்லாத இரும்புச்சத்து உள்ளது, இது அடர் பச்சை இலை காய்கறிகள், கருப்பு திராட்சை, பேரீட்சை, அரிசி (போஹா), பருப்பு வகைகளில் காணப்படுகிறது. ஹீமோகுளோபின் அல்லாத இரும்பு உறிஞ்சப்படுவதற்கு, வைட்டமின் சி அவசியம். இந்திய நெல்லிக்காய், கொய்யா, பழங்கள், இலை கீரைகள், எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
பீட்ரூட் ஃபைபர், ஃபோலேட் (வைட்டமின் பி 9), மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இரும்பு மற்றும் ஃபோலேட் நிறைந்திருப்பதால், இது உடலில் நைட்ரேட்டுகளை உருவாக்குகிறது, இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
உணவில் குறைவான அளவு உப்பையே சேர்க்க வேண்டும். ஏனெனில் இது இதயத்திற்கும் இரத்த அழுத்தத்திற்கும் நல்லது. ஆனால் அதிக உப்பு எடுத்துக் கொள்வதால் உடலில் நீரைத் தக்கவைத்துக்கொள்வதிலும் சுவாசத்திலும் சிரமங்களை ஏற்படுத்தும். குறைந்த பொட்டாசியம் சுவாசக் கஷ்டத்தையும் ஏற்படுத்தும், எனவே வாழைப்பழங்கள், பீட்ரூட் சாறு நன்மை பயக்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில். முக்கியமாக இதய ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உங்கள் இதயத்தை உறுதிப்படுத்தவும், உங்கள் ஆக்ஸிஜன் அளவும் உங்கள் நுரையீரலும் வலுவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஸ்பைருலினா
இயற்கையான ஆல்கா தூள் அதிக புரதச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. கடல் ஆல்கா – ஸ்பைருலினா – ஆக்ஸிஜனேற்றங்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் நமது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. ஸ்பைருலினா பீட்டா கரோட்டின், பி 12, அரிய கொழுப்பு அமிலம், காமா லினோலெனிக் அமிலம் வடிவில் ஏ போன்ற அத்தியாவசிய வைட்டமின்களைக் கொண்டுள்ளது.
நமது உடலில் ஆக்ஸிஜன் செறிவை அதிகரிப்பதற்கு ஒரு ஆரோக்கியமான பானம் நமக்கு உதவுகிறது. வாருங்கள் அந்த ஆரோக்கிய பானத்தை எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்.
சிறந்த ஆக்ஸிஜன் செறிவூட்டலுக்கான ஆரோக்கியமான பானம்
½ கப் கேரட்
½ கப் மாதுளை
1/4 கப் பீட்ரூட்
1/4 கப் செலரி அல்லது வெற்று கீரை
⅔ கப் ஆரஞ்சு
½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
இலவங்கப்பட்டை தூள் சிறிதளவு
1 ஸ்பைருலினா மாத்திரை அல்லது 0.5 கிராம் ஸ்பைருலினா தூள்
மேற்கண்ட பொருட்களை ஒரு ஜூஸரில் போட்டு கலக்கவும், அதனை ஒரு கிளாஸில் ஊற்றி, சியா விதைகளை மேலே தூவி இந்த ஆக்ஸிஜனேற்றப்பட்ட பானத்தை அருந்துங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil