குருமாவா செஞ்சு போர் அடிக்குதா? சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க

Easy Paneer Butter Masala recipe tamil: சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பனீர் பட்டர் மசாலா எப்படி தாயார் செய்யலாம் என இங்கு பார்க்கலாம்.

Paneer Butter Masala recipe in tamil: Restaurant style Paneer Butter Masala in tamil

Paneer Butter Masala recipe in tamil: நம்மில் பலர் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறி உள்ளது பனீர் பட்டர் மசலா. இவற்றில் அசைவத்தை காட்டிலும் புரதசத்து அதிகம். சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என செய்து போரடித்தவர்கள் நிச்சயம் முயற்சி செய்ய வேண்டிய டிஷ் இது. மேலும் இவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பனீர் பட்டர் மசாலா எப்படி தாயார் செய்யலாம் என இங்கு பார்க்கலாம்.

பன்னீர் பட்டர் மசலா செய்யத் தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – 75 மில்லி
வெங்காயம் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 ஸ்பூன்
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 3 டீ ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய் தூள் – 2 1/2 டீ ஸ்பூன்
சுடு தண்ணீர்
முந்திரி பருப்பு – 1கப் (அரை மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்)
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா – 1 1/4 டீ ஸ்பூன்
சர்க்கரை – 2 டீ ஸ்பூன்
பட்டர் – 2 டீ ஸ்பூன்
பிரஷ் கிரீம் – 4 டீ ஸ்பூன்
மலாய் பன்னீர்
கொத்தமல்லி

பன்னீர் பட்டர் மசலா தயார் செய்வதற்கான செய்முறை

ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அவை ஓரளவு நன்கு வதங்கிய பிறகு,
அவற்றோடு மஞ்சள் தூள், மல்லி தூள், காஸ்மீரி மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் அவற்றோடு 1 டம்ளர் சுடு தண்ணீர் சேர்த்து 1 நிமிடங்களுக்கு கிளறிய பிறகு, 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த கலவை நன்கு கொதித்து வந்த பிறகு ஊற வைத்து அரைத்து வைத்துள்ள முந்திரி பருப்பு கலவை சேர்த்து மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பிறகு அதில் சர்க்கரை, பட்டர் மற்றும் பிரஷ் கிரீம் சேர்த்து கொதிக்க விடவும். இந்த கலவை நன்கு கொதித்து வந்த பிறகு அதில் மலாய் பன்னீர் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து தனலை அணைக்கவும்.

இப்போது சப்பாத்தி மற்றும் ரொட்டிகளோடு சேர்த்து சுவைத்து மகிழவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Paneer butter masala recipe in tamil restaurant style paneer butter masala in tamil

Next Story
சத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது!Ragi recipe in tamil: How to do finger millet puttu in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com