பீதி தாக்குதலை திடீரென தோன்றும் தீவிர பயம் அல்லது உடலில் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய அசெளகர்யம் என்று சொல்ல்லாம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
திடீரென விவரிக்க இயலாத பதட்டம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை மற்றும் இதர அழுத்தத்துக்கு உரிய உடல் ரீதியான அறிகுறிகளை எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் அனுபவித்த பீதி தாக்குதல் இந்த நிலை, இன்றைகாலகட்டத்தில் பொதுவானதாக மாறி வருகிறது. அழுத்தத்துக்கு உட்பட்ட வேலை சூழல் காரணமாக பெரும்பாலான மக்களின் வாழ்க்கை பரபரப்பான வாழ்க்கையாக மாறி விட்டது.
பீதி தாக்குதலை திடீரென தோன்றும் தீவிர பயம் அல்லது உடலில் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய அசெளகர்யம் என்று சொல்ல்லாம். எச்சரிக்கை இல்லாமல் கூட அவைகள் ஏற்படலாம். உண்மையான அபாயம் இல்லாதபோது அல்லது வெளிப்படையான காரணங்கள் இல்லாமல் கூட ஏற்படலாம். பீதித்தாக்குதலின் அறிகுறிகள் என்பது தனித்தனி நபர்களுக்கு ஏற்றவாறு மாறுபட்டதாக இருக்கலாம். ஆனால், இந்த அறிகுறிகள், சில நிமிடங்களில் உச்சமடையும்.
“உலக சுகாதார அமைப்பின் ஒரு அறிக்கையில் கூறியுள்ளபடி, தோராயமாக 56 மில்லியன் மக்கள் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 மில்லியன் மக்கள் மனக்கவலை கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.பலர் இந்த பீதி தாக்குதலை ஒரே ஒரு முறை மட்டும் அறிந்திருப்பார்கள் அல்லது குறிப்பாக அழுத்ததின் விளைவாக வாழ்க்கையில் இரண்டு முறை மட்டும் உணர்ந்திருப்பார்கள். ஆனால், இந்த தாக்குதல் தொடர்ச்சியாக இருந்தால், அந்த நிலை பீதிகோளாறு என்று கண்டறியப்படும்,” என்கிறார் ஜிகிட்சா ஹெல்த்கேர் லிமிடெட்டின் மருத்துவ இயக்குநர் மற்றும் ஆலோசனை இயக்குநர் மருத்துவர் சந்தோஷ் தாதர்.
ஆய்வுகள் கூறுவதின் படி, இளைஞர்கள்(18 முதல் 33 வயதுக்கு உட்பட்டோர்) மற்றும் மத்திம வயதினர் (34 வயதில் இருந்து 47 வயதுக்கு உட்பட்டோர்) ஆகியோர் அதிக பட்ச அழுத்தம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. இந்த வயதினரின் கூட்டுத் தொகைதான் நாட்டின் வேலைத்தளத்தின் தொகையாக இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் பீதி தாக்குதலில் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். பீதி கோளாறுகளில் பெண்கள் முதல் ஆண்களின் விகிதம் 3;2 ஆக இருக்கிறது.
மிகவும் பொதுவான சில அறிகுறிகள் ;
எதிர்காலத்தில் நிகழ இருக்கும் அழிவு அல்லது ஆபத்தின் உணர்வு
மூச்சுத்திணறல்
மூச்சடைப்பு அல்லது மூச்சடைப்பு போன்ற உணர்வு
பாராஸ்டீசியா (உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு)
விரைவான , துடிக்கும் இதயத் துடிப்பு
வியர்வை
சுய நினைவு இழத்தல் போன்ற உணர்வு
உதறல் அல்லது நடுக்கம்
சில்லிட்டுப்போதல்
குமட்டல்
தலைசுற்றல், தலைலேசாதல்
கோபத்தில் உடல் சிவத்தல்
வயிற்றுப் போக்கு
உணர்வற்று இருத்தல்(உண்மைக்கு மாறான உணர்வுகள்), அல்லது உங்களுக்கு மேலே மிதப்பது போன்ற உணர்வு(சுயத்தில் இருந்து விலகி இருத்தல்)
ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. ஆனால், குடும்பபின்னணி, முக்கியமான வாழ்க்கை அழுத்தங்கள், அதிர்ச்சிகரமான நிகழ்வு (இப்போது அல்லது கடந்தகாலத்தில்) புகைபிடித்தல் அல்லது அதிக அளவு காஃபின் உட்கொள்ளுதல் போன்ற வேறு பல காரணங்களும் முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கலாம்.
பீதி தாக்குதல் அச்சுறுத்துவதாக இருக்கலாம். ஆனால், அவை எப்போதுமே அபாயமானவை அல்ல. எனினும், அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு முறை இது போன்ற பீதி தாக்குதலை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். சில அறிகுறிகள், குறிப்பிட்டு சொல்லக் கூடிய நோய்க்கான முன் எச்சரிக்கையாக இருக்கலாம். நோயாளியை முழுவதுமாக ஆராய வேண்டும்.
மீண்டும், மீண்டும் ஏற்படும் பீதித்தாக்குதலானது, குற்ற உணர்ச்சி, பயங்களை அதிகரித்தல், சமூக நிகழ்வுகளில் இருந்து விலகி இருத்தல், மன அழுத்தம் மற்றும் பய கோளாறுகள், பணி சூழலில் பிரச்னைகள், மது அல்லது உப்பொருட்களின் பயன்படுத்துதல் போன்ற சிக்கலை நோக்கிச் சென்று விடும். பீதி தாக்குதலின் போது உங்களுக்கு உதவ சில முறைகள் உள்ளன.
பீதி தாக்குதலில் இருந்து கடந்து செல்ல சில வழிகள். குறிப்பாக அலுவலகத்தில்;
தாக்குதலுடன் சண்டையிடாதீர்கள் நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருக்கவும்.
தாக்குதல் அபாயமானதல்ல என்றும் சில நிமிடங்களில் கடந்து சென்று விடும் என்றும் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்,
மிக விரைவாக சுவாசிப்பதை தவிர்க்க, ஆழமாக, மெதுவாக சுவாசிக்கவும். உங்கள் மூக்கின் வழியே ஆழமாக சுவாசித்து, உங்கள் மார்பு மற்றும் வயிற்றில் காற்றை நிரப்பவும், பின்னர் வாயின் வழியே காற்றை வெளியேற்றவும்.
தாக்குதலை தூண்டக் கூடிய வெளிப்புறத் தூண்டுதல்களை தடுக்க, உங்கள் கண்களை மூடவும்.
உங்களை நீங்களே அமைதிப்படுத்த, தசைகளை தளர்வடைய செய்யும் முறைகளைப் பின்பற்றவும்.
சாதகமான எண்ணங்களில் , தளர்வு ஏற்படுத்தும் படங்களில் கவனம் செலுத்தவும்.
உங்களில் இருந்து விலகி இருத்தல் என்ற உணர்வில் இருந்து மீள, தரைப்பயிற்சிகளை செய்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பாதுகாப்பு, அன்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய பொருட்களை கையில் வைத்திருங்கள்
பீதி தாக்குதலை தடுக்கும் அல்லது பாதிப்புகளை குறைக்கும் சில வழிமுறைகள்;
மருத்துவ ஆலோசனை
உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். உங்கள் அறிகுறிகளின் தன்மையை அவர் குறித்து வைத்துக் கொள்வார். உடலை ஆராய்வார். அதோடு தொடர்புடைய நோய்களை சரி செய்ய சில சோதனைகளை எடுக்கச் சொல்வார். மருத்துவர் சில பிசியோதெரபி சிகிச்சை முறைகளை அதாவது நடத்தை சார்ந்த சிகிச்சைகளை அறிவுறுத்துவார். தேவைப்படின் சில மருத்துகளை பரிந்துரைப்பார்.
தூண்டுதல்களை அடையாளம் காணுதல்
பீதி தாக்குதல், உள் அல்லது வெளி தூண்டுதல்களால் உருவாகக் கூடியதாக இருக்கலாம். இந்த தூண்டுதல்களை அறிய முயற்சி செய்யுங்கள். இந்த தாக்குதலில் இருந்து நல்ல வழியில் விடுபட அது உங்களுக்கு உதவும்.
முறையாக உடற்பயிற்சி செய்யுங்கள்
உடற்பயிற்சியானது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் சுரக்கும் ஹார்மோன்களை உடலில் இயக்கும். பல்வேறு இதர ஆரோக்கிய நலன்களுக்கு மத்தியில் இது ஒரு நபரின் மன நிலையை உயர்த்த உதவுவதாக இருக்கும். எனினும் எந்த ஒரு உடற்பயிற்சி முயற்சியை தொடங்கும் முன்பும் உங்களது மருத்துவரை ஆலோசிக்கவும்.
போதைப்பொருள் உபயோகத்தை தவிர்க்கவும்
காஃபின், மது, புகையிலை உபயோகிப்பது, புகைபிடித்தல் அல்லது இதர போதைப்பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
தளர்த்தும் முறைகள்
யோகா பயிற்சி மற்றும் உங்கள் உடலை தளர்த்தும் நுட்பங்களை பயிற்சி செய்யவும்.
போதுமான உறக்கம்
போதுமான உறக்கம் என்பது, பீதி தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று மட்டுமின்றி தவிர ஒருவரின் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் மன நல த்தோடு தொடர்புடையதாகும்.
பீதி தாக்குதலின் போது மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை மனதில் கொள்ளுங்கள் அல்லது இவை விரைவான மீட்டெடுத்தலை உறுதி செய்வதாக இருக்கும். உங்களுக்கு அருகே பீதி தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு இது உதவும் அறிவுரையாக , இந்த முறைகளை பயிற்சி செய்யும் படி அவர்களுக்கு அறிவுறுத்துவதாக இருக்கும். ஏதேனும் தேவை எழும்பட்சத்தில், அவசரகால மருத்துவ உதவி எண்களை தயாராக வைத்திருக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.