Papaya Fruit Benefits: வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களின் பட்டியல் மிக நீண்டதாக இருந்தாலும், நீங்கள் உங்கள் டயட்டில் கட்டாயம் சேர்த்துக் கொண்டு தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய ஒரு பழம் பப்பாளி.
மஞ்சள் கலந்த ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இது ஒருவருடைய எடையை குறைப்பதற்கும் கொழுப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் உதவும்.
தினமும் காலையில் ஒரு கப் பப்பாளி துண்டுகளை சாப்பிடும் போது ஜீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கப்பெற்று குடல் இயக்கம் சீராகிறது. மேலும் வயிறு உப்புதல், மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளையும் போக்குகிறது.
Papaya Benefits In Tamil: பப்பாளி எப்படி உதவுகிறது ?
வைட்டமின் சத்து ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ள பப்பாளி உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக நோய் மற்றும் நோய் தொற்றுக்கள் விலகி ஓடுகிறது.
நீங்கள் உங்களுடைய எடை குறைப்பு திட்டத்தில் தினமும் காலை ஒரு கப் பப்பாளி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். குறைவான கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள பப்பாளி, தேவையற்ற பசியைப் போக்கி உங்கள் வயிறு நிறம்பியுள்ள உணர்வை நீண்ட நேரத்துக்கு தரும்.
பப்பாளியிலுள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், antioxidants, மற்றும் நார்ச்சத்துக்கள் இரத்தக்குழாய்களை ஆரோக்கியமாக வைக்கிறது இது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. சீரான இரத்த ஓட்டம் காரணமாக கொழுப்பின் அளவு குறைகிறது இதன் காரணமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படும் அபாயம் குறைகிறது.
பப்பாளியில் அடங்கியுள்ள papain என்ற நொதி (enzyme) ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது இது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
பப்பாளியிலுள்ள ஊட்டச்சத்துக்களான lutein, zeaxanthin மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை கண்களுக்கு நல்லது என்று நம்பப்படுகிறது. மேலும் வயது மூப்பு காரணமாக ஏற்படக்கூடிய பல நோய்களை தடுக்கவும் செய்கிறது.
பப்பாளி சாப்பிடுவது நமது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் நமது சருமத்துக்கும் பல நன்மைகளை தரக்கூடியது. பப்பாளியில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், carotenoids போன்ற beta-carotene மற்றும் lycopene ஆகியவை நமது சருமத்துக்கு நல்லது. முகத்தில் ஏற்படுகின்ற சுருக்கங்கள் மற்றும் வயது முதிர்ச்சியின் அடையாளங்களையும் போக்கும்.
பழுத்த பப்பாளி பழத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது. அதை desserts மற்றும் salads ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
பப்பாளியை யார் சாப்பிடக் கூடாது ?
பப்பாளியில் அடங்கியுள்ள latex காரணமாக early labour மற்றும் கருப்பை சுருக்கங்கள் (uterine contractions) ஆகியவை ஏற்படும், எனவே கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.