நமது இரத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும், இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கட்டுப்படுத்துகிறது. குறைந்த அளவிலான ஹீமோகுளோபின் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். சோர்வு, முடி உதிர்தல், தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் விரைவான இதய துடிப்பு போன்ற அறிகுறிகளின் மூலம் ஹீமோகுளோபின் குறைவை அறியலாம். இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுக்கு ஒரு முறை ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்துக் கொள்வது நல்லது. ஹீமோகுளோபின் சாதாரண அளவு வயது வந்த ஆண்களுக்கு 14 முதல் 18 கிராம் / டெசி.லிட்டர் மற்றும் வயது வந்த பெண்களுக்கு 12 முதல் 16 கிராம் / டெசி.லிட்டர்.
18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் சுமார் 8 மில்லிகிராம் இரும்புச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மறுபுறம், 19-50 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 18 மில்லிகிராம் இரும்புச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஒரு ப்ளெண்டரில் ஒரு சில கீரை இலைகளைச் சேர்த்து, உங்கள் சுவைக்கு ஏற்ப நறுக்கப்பட்ட பீட்ரூட் மற்றும் ஆப்பிள்களை சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இந்த பானத்துடன் இனிப்புக்கு நீங்கள் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கலாம். இந்த பானத்தை காலை உணவாகவோ அல்லது உடற்பயிற்சிக்கு பிறகோ பருகலாம்.
ஒரு ஆப்பிளில் 0.31 மில்லிகிராம் இரும்பு உள்ளது, 100 கிராம் பீட்ரூட்டில் 0.8 மில்லிகிராம் உள்ளது. 100 கிராம் கீரையில் 4 மில்லிகிராம் இரும்பு உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/cashew.jpg)
பாதாம், திராட்சை, பூசணி விதைகள், வேர்க்கடலை, முந்திரி, எள், அக்ரூட் பருப்புகள் போன்றவை இரும்புச்சத்து நிறைந்த சில பொருட்கள்.
பருவகால பழங்களான தர்பூசணி, மாதுளை, ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி அனைத்தும் இரும்புச்சத்தால் நிறைந்தவை. இவற்றை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட் ஆக செய்தும் சாப்பிடலாம்.
தர்பூசணி- 0.4 மில்லிகிராமும், மாதுளை- 0.3 மில்லிகிராமும் மற்றும் ஸ்ட்ராபெர்ரி- 0.4 மில்லிகிராமும் இரும்புச்சத்து உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/peanuts_759_thinkstockphotos1.jpg)
வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் உடலின் இரும்புச்சத்து வீதத்தை அதிகரிக்கும். மேலும், வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. வைட்டமின் சி கிடைக்க ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி, திராட்சைப்பழம் மற்றும் தக்காளி போன்றவற்றை நீங்கள் உண்ணலாம்.
அரிசி வகைகளில் பழுப்பு அரிசியில் அதிக இரும்புச்சத்து உள்ளது. 100 கிராம் பழுப்பு அரிசியில் சுமார் 0.5 கிராம் இரும்பு உள்ளது. எனவே நீங்கள் வெள்ளை அரிசியை உண்பதை விட பழுப்பு அரிசியை உண்பது சிறந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil