Pilgrimage Holiday Destinations in Kerala : ஆன்மீக சுற்றுலா தளங்களில் உலகத்திலேயே சிறந்ததாக இருப்பது இந்தியா தான். அதிலும் கேரளா மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு வெளிநாட்டினர்கள் பலரும் வருவது வழக்கம்.
கேரள மாநிலத்தில் சபரிமலை தொடங்கி, பீமபள்ளி திருப்பள்ளிவாசல் வரை பல வழிபாடு ஸ்தலங்கள் உள்ளது. தென் இந்தியாவை பொருத்த வரை கேரளத்திற்கே அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புவோர் இந்த மாநிலத்திற்கு செல்லாமல் இருப்பதில்லை.
Pilgrimage Holiday Destinations in Kerala : கேரளா மாநிலத்தில் பார்க்க வேண்டிய கோவில்கள்
வழிபாடு ஸ்தலங்கள் கேரளத்தில் அதிகமாக இருப்பினும், அந்த பட்டியலில் பிரபலமான சிலவற்றின் தொகுப்பு இது:
1. குருவாயூர் கோவில்
திருமாலின் உலகமாக கருதப்படும் வைகுண்டம், சொர்க்கமாக போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாக போற்றப்படும் ஒரு கோவில் இந்த பூ உலகில் உள்ளது என்றால் அது தான் உலகில் உள்ள கிருஷ்ணர் கோவில். மஹாவிஷ்ணுவே பூமியில் வீற்றிருக்கும் ‘பூலோக வைகுண்டம்’ என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த ஆலயத்தை தரிசிப்பது மிகப்புண்ணியமான ஒன்றாக நம்பப்படுகிறது. முக்கியமான வைணவ திருத்தலம் எனும் ஒப்பற்ற கீர்த்தியையும் இந்த தொன்மையான ஆலயம் கொண்டுள்ளது.
திரிசூரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் இருப்பது குருவாயூர் ரயில் நிலையம். எனவே அங்கிருந்து கோவிலுக்கு வருவது சுலபம்.
2. ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில்
பத்மநாபசுவாமி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பகவான் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். இது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலை தூங்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளதாக கருத்து உண்டு. அதாவது அந்த சிலை விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பதை போன்று இருக்கிறது.
இந்த கோவில் திருவநந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து வெரும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது. அதனால் அங்கிருந்து ஒரு ஆட்டோ எடுத்தால் கூட வந்துவிடலாம்.
3. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்
கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே இடப்பெயருடன் இணைத்து பகவதி என்றே அறியப்படுகின்றனர். இருப்பினும் எந்த அம்மன் கோவில்களுக்கும் இல்லாத சிறப்பு திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கும் அந்த அருள் வழங்கும் அம்மனுக்கும் உண்டு. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா இந்த ஆலயத்தின் சிறப்புக்கு குறிப்பிடும்படியான ஒரு காரணமாக இருக்கிறது எனலாம். இது பல லட்சம் பேர் அதுவும் பெண்கள் மட்டும் திரண்டு நடத்தும் பொங்கல் திருவிழா. அருள் சுரந்திடும் அம்மனின் மகிமையால், நலம் பல பெற்று வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவநந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இந்த கோவிலுக்கு ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ அல்லது கார் எடுத்தால் சுலபமாக சென்றுவிடலாம்.
4. செயிண்ட் ஆண்ட்ரூ ஃபோரேன் ஆலையம்
கிறிஸ்தவ ஆலையங்கள் பல கேரளாவில் அழகாக அமைந்திருக்கிறது. வெறும் படங்களில் மட்டுமே அழகான கிறிஸ்தவ ஆலையங்களை காண்டிருக்கும் நீங்கள் நேரில் சென்று பார்க்க வேண்டும் ஸ்தலத்தில் இதுவும் ஒன்று. கிறிஸ்தவ வழிபாடு மற்றும் பண்டிகை நாட்களில் இந்த ஆலையம், பக்தர்களால் நிறம்பி வழிந்திருக்கும். வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆலையத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம்.
சேர்த்தலா ரயில் நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆலப்புழா ரயில் நிலையத்தில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த இடத்திற்கு கார் எடுத்து சென்றால் வசதியாக சுற்றிப் பார்க்கலாம்.
5. பீமபள்ளி பள்ளிவாசல்
திருவனந்தபுர வலத்தில், பீமபள்ளியில் பிரபலமான பள்ளிவாசல் இருக்கின்றது.திருவநந்தபுரத்தின் நகரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த பள்ளிவாசலுக்கு போக்குவரத்து வசதிகளும் அதிகம் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தொழுகைக்கு விளக்கு, பட்டுத் துணி, மலர்கள் எடுத்து வருவது வழக்கம். சாதி மதங்கள் வேறுபாடுகளை கடந்து பலரும் இந்த பள்ளிவாசலுக்கு வந்து செல்கின்றனர்.
திருவநந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.
எங்கயாவது டூர் போகணும் போல இருக்கா? அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க