Disha Roy Choudhury
PM Modi pitches for Indian dogs: Indie breeds intelligent, have strong immunity, say pet owners : டெல்லியில் வசிக்கும் ஸ்வேதா மகேஷ் கொரோனா ஊரடங்கிற்கு சில காலங்கள் முன்பு தான் நாட்டு நாயொன்றை மீட்டு கொண்டு வந்தார். உணவகங்களும் மூடப்பட்ட நேரம் அது. தெருநாய்களுக்கு உணவளிக்கவும் மக்கள் பயந்து கொண்டிருந்த நேரம் அது. நாட்டு நாயக்ள் மிகவும் அறிவானவை, உறுதியானவை, எளிதில் பழக்கப்படுத்திவிடலாம் மேலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டி அளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்திய நாய் இனங்களை வளர்க்குமாறு மக்களை வலியுறுத்தினார், குறிப்பிட்ட இராணுவ நாய்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவைகள் செய்யும் பங்களிப்புகளை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நம் நாட்டில், பெரும்பாலான நாய் உரிமையாளர்கள் இந்திய நாய்களுக்குப் பதிலாக வெளிநாட்டு நாய்களையே வாங்குகின்றனர்.
To read this article in English
நாட்டு நாய்கள் Vs வெளிநாட்டு நாய்கள்
பயிற்சி தருவதற்கு எளிதானது என்பதை தவிர்த்து பார்க்கவும் மிகவும் அழகானது வெளிநாட்டு நாய்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் நொய்டாவில் வசிக்கும் சங்கீதா பனிக்கர் ஜாப்பனீஸ் ஸ்பிட்ஸ் மற்றும் ஒரு நாட்டு நாயை வளர்க்கிறார். “நான் ஒரு நாட்டு நாயை வளர்க்கின்றேன். நாட்டு நாய்களை விட சிறந்தது எதுவும் இல்லை என்று தான் கூறுவேன். மிகவும் எளிமையாக பயிற்சி அளித்துவிடலாம். அதே போன்று நம்முடன் எளிதாக ஒட்டிக்கொள்ளும். வெளிநாட்டு நாய்களுக்கு வருவது போல தொற்று மற்றும் அலெர்ஜிக்களில் இருந்து தப்பிக்க சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. அதன் பரமாரிப்பிற்கு ஆகும் செலவும் மிகவும் குறைவு என்று அவர் கூறியுள்ளார்.
பனிக்கரின் கருத்து தான் நிறைய நாய் வளர்ப்பாளர்களின் எண்ணமாக இருக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்திய நாய்களின் கடினத்தன்மைக்கான ரகசியம் பரிணாம வளர்ச்சியில் இருக்கலாம், தவிர வெளிநாட்டு இனங்கள் இந்திய காலநிலைக்கு ஏற்ப மாற்ற வேண்டும். ஒடிசாவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஆதியா பாண்டா “இயற்கையாகவே மாற்றம் அடைந்த ஒரு இனத்தில், மிகச் சிறந்தவை மட்டுமே உயிர்வாழ்கின்றன, குறைபாடுகள் உள்ளவை தாக்குப்பிடிப்பது இல்லை. இந்திய நாய்கள் பொதுவாக மிகவும் ஆரோக்கியமானவை, அவற்றின் சராசரி ஆயுட்காலம், நல்ல பராமரிப்பில் இருக்கும் போது, 15 ஆண்டுகளுக்கும் மேலாகும். ஹிப் டிஸ்ப்ளாசியா மற்றும் பிற மரபணு சுகாதார நோய்கள் மிகவும் அரிதானவை. ”
புது தில்லியைச் சேர்ந்த திவ்யா பூரி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து “நாங்கள் சாலையில் அடிப்பட்டுக்கிடந்த மூன்று இந்திய நாய்களை தத்தெடுத்தோம். இதற்கு முன்பு டாபர்மேன், லாப்ரடோர் மற்றும் ரோட்வெய்லர் வைத்திருந்தேன், இந்திய நாய்களை பராமரிக்க மிகவும் எளிதானது என்று நான் கூறுவேன். அவைகளுக்கு நிறைய மருத்துவ பிரச்சினைகள் இல்லை. எடுத்துக்காட்டாக, ஒரு லாப்ரடருக்கு ஆர்த்ரிடிஸ் அல்லது ஹிப் டிஸ்ப்ளாசியா (மேல் தொடையின் எலும்பு பகுதியை முழுமையாக மறைக்காத இடுப்பு சாக்கெட்டுக்கான மருத்துவ சொல்) இருக்கும். ஆனால் நாட்டு நாய்களில் இந்த பிரச்சனை இல்லை” என்று கூறினார்.
புதுடெல்லியை சேர்ந்த அனிருத்தோ சக்ரபோர்த்தி கூறுகையில், வெளிநாட்டு நாய்கள் மிகவும் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் சிலர், அந்நாய்களுக்கு ஆகும் மருத்துவ மற்றும் இதர கண்காணிப்பு செலவுகளுக்கு அஞ்சி கைவிடுதை வழக்கமாக கொண்டுள்ளனர். பீகில் – லேப் மிக்ஸ் ஹைப்ரிட் நாய் ஒன்றை வைத்திருக்கிறார் அனிருத்தோ. “நாய் தத்தெடுப்பு பற்றி எனக்குத் தெரிந்த வரையில், இந்த வெளிநாட்டு இனங்கள் நிறைய கைவிடப்பட்டு பிறகு தத்தெடுக்கப்படுகின்றன. நிச்சயமாக, வெளிநாட்டு இனங்கள் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒரு பீகிளை கையாளவது மிகவும் கடினம், ஆனால் அழகாக இருக்கிறது. இந்த வெளிநாட்டு நாய்களில் சில இந்த காலநிலைக்கு வடிவமைக்கப்படவில்லை” மேலும் ஒரு வெளிநாட்டு நாய் வைத்திருப்பதை மக்கள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிளாகவே காண்கிறார்கள்.
சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் தொடர்பான சுவாரசியமான செய்திகள், லைஃப்ஸ்டைல், ஆரோக்கியம், வைரல் வீடியோ என அனைத்தையும் கொள்ள திரைஜாலம் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள் வாசகர்களே
#IETamil #thiraijaalam
https://www.facebook.com/IETamilThiraiJaalam/
காலனி ஆதிக்கத்தின் நீட்சியாகவே வெளிநாட்டு நாய்கள் வளர்ப்பு தொடர்ந்து வருகிறது என்கிறார் கால்நடை மருத்துவர் ஆதித்யா எஸ். தோபட்கார். இன்று நாம் பயன்படுத்தும் சில நாய்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் இங்கு இறக்குமதி செய்யப்பட்டவை. இந்தியாவின் உயர்வர்க்கத்தினர் இந்த நாய்களை 1947ம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்க்க துவங்கியுள்ளனர். இன்றும் கூட, இந்தியாவில் உள்ள கென்னல் கிளப்புகள் மேற்கில் உள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன, அதன் உறுப்பினர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த கிளப்களில், குறிப்பிட்ட குணாதிசயங்களுடன் கூடிய நாய்களை தேடுகின்றனர். ரூ. 10,000-20,000 வரை நாய்கள் கிடைக்குமா என்று பார்க்கின்றனர். இந்த வெளிநாட்டு இனங்கள் அனைத்தும் ஐரோப்பிய அல்லது அமெரிக்கன் வகையை மட்டும் சார்ந்தது அல்ல; சில சீனோ திபெத்தியன் வகையை சேர்ந்தவை. அவை அளவில் மிகவும் சிறியவையாக இருக்கிறது.
அனைத்து இந்திய நாய்களும் ஒன்றல்ல
நாட்டு நாய்கள் என்றால் நம் அனைவருக்கும் உடனே நினைவில் வருவது தெருநாய்கள் தான். நாட்டு நாய்கள் பற்றி நமக்கு ஏதும் தெரியாத காரணத்தால் தான் நாம் இப்படி நினைத்துக் கொள்கிறோம். இந்திய நாய்களை ஒரே மாதிரியான இனமாக நினைப்பது தவறு என்று டாக்டர் தோபட்கர் கூறினார். இடைக்காலத்திலிருந்து(Medieval) , இந்திய நாய் இனங்கள் வரலாற்று எல்லை தாண்டிய கூட்டணிகள் மற்றும் வெற்றிகளின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளன.
மேலும் படிக்க : இந்தியாவின் பூர்வீக நாய் இனங்களின் வரலாறு அறிவோமா?
லடாக், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் அல்லது அருணாச்சல பிரதேசத்தில் திபெத்தை பூர்வீகமாகக் கொண்ட நாய்கள் உள்ளது. இந்த திபெத்திய இனங்கள் நகரங்களில் நீங்கள் காணும் நாய்களிலிருந்து வேறுபடும். கர்நாடகாவின் வடக்கு பிராந்தியத்தை பின்பற்றி பெயரிடப்பட்ட முடோல் ஹவுண்டை அந்த மாநிலத்தில் காணலாம். இந்த இனம் மகாராஷ்டிராவிலும் காணப்படுகிறது, ”என்று கால்நடை மருத்துவர் கூறினார். இதனை பஷ்மி மற்றும் கரவன் என்றும் அழைக்கின்றோம். பாலைவன வேட்டை நாயான சலுக்கி இனத்தின் நேரடி வம்சாவளியாகும் இந்த நாய். பண்டைய அரபி இலக்கியத்திலும் இந்நாய் பற்றிய நிறைய குறிப்புகள் உள்ளது.
சலுகி, ஆப்கானிய ஹவுண்டோடு நெருங்கிய தொடர்புடையது. Petsworld.in இன் படி, தக்காண பீடபூமியில் குடியேறிய பதான்ஸ் மற்றும் ரோஹிலாஸ் ஆகியோரால் ஆப்கானிஸ்தான் ஹவுண்ட் இந்திய துணைக் கண்டத்திற்கு கொண்டு வரப்பட்டது, இந்த நாய்கள் ஏன் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது என்பதை இது விளக்குகிறது. இந்த நாய்கள் நீண்ட கால்கள் கொண்ட உயரமான மெலிந்த உடலை கொண்டுள்ளன, மேலும் சிறந்த சகிப்புத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சலுகி, பஷ்மி என்று அழைக்கப்படுகிறது.
எஸ் தியோடர் பாஸ்கரன் எழுதிய The Book of Indian Dogs ராம்பூர் ஹவுண்டுகளைப் பற்றி குறிப்பிடுகிறது, அவை மகாராஷ்டிராவில் திலாரிஸ் என்று அழைக்கப்படும் நாடோடி மக்களால் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த புத்தகம் “ஜிப்சி தோற்றம் மற்றும் பழக்கவழக்கங்களை கொண்ட நாடோடி பழங்குடியினருக்கு” சொந்தமான பஞ்சாரா ஹவுண்டுகள் பற்றியும் பேசுகிறது.
வழக்கமான இந்திய நாய் எது?
“ஒரு பொதுவான பூர்வீக இந்திய நாய் இமயமலை-திபெத்திய எல்லையிலிருந்தோ அல்லது பர்மிய எல்லையிலிருந்தோ வந்தவைகள் கிடையாது. அவர் நாடோடிகளால் வளர்க்கப்பட்டதும், ஆப்கானிய எல்லையில் இருந்து வந்ததும் இல்லை. மிகச்சிறந்த இந்திய நாய்க்கு எல்லைப்புற மரபணு பரிமாற்றம் இல்லை. அவைகள் நாட்டு நாய்கள். கால்நடை மருத்துவர், ஆதியா பாண்டா பூர்வீக நாய் இனத்திற்கு ‘INDog’ என்ற பெயரை வைத்துள்ளார்.
indog.co.in என்ற இணையத்தில், பாண்டா, இந்திய நாட்டு நாய்களை பரையா என்று அழைக்கிறார். மங்கோல், மட், ஸ்ட்ரே என்று பல பெயர்களை தவறாக பயன்படுத்துவதாக கூறுகிறார். மிகவும் பழமையான வளர்ப்பு நாய்களில் ஒன்றாக இந்த நாய் பார்க்கப்படுகிறது. இயற்கையாக பரிமாணம் பெற்ற இந்நாய்கள் வீட்டு வளர்ப்பிற்கு ஏற்றதாகும்.
Beautiful photo! https://t.co/aHcugPEwFp
— Narendra Modi (@narendramodi) August 30, 2020
ஒரு பூர்வீக இந்திய நாயின் பண்புகள்
தனது கட்டுரையில், பாண்டா பூர்வீக இந்திய நாயின் பண்புகளை குறிப்பிடுகிறார். “இது சதுரம் அல்லது சற்று செவ்வக உருவாக்க பண்புகளையும் குறுகிய கோட் கொண்ட நடுத்தர அளவிலான நாய்களாகும். சுத்தமான, சிசர்பைட் தாடைகளை அது கொண்டுள்ளது” என்று எழுதியுள்ளார். மேலும் அந்நாய்களின் சுகாதாரம் குறித்து அவர் எழுதும் போது, “மிகக் குறைவாகவே அந்நாய்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் எழும். குளிரில் அவைகளால் தாக்குபிடிக்க இயலாது. ஆனால் வெப்பமண்ட சீதோசன நிலைக்கு நன்றாக வளரக்கூடியவை. சரும பாதுகாப்பிற்கு மிகவும் குறைவான கவனிப்பே போதுமானதாகும். மேலும் அவை மிகவும் சுத்தமாக இருக்கும். அதன் உடம்பில் நாற்றம் வீசுவதே இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்திய நாய்களை கையாளுவது
ராம்பூர் ஹவுண்ட், முதோல், அல்லது தங்கரி குத்ரா போன்ற நாய்கள் வீட்டின் படுக்கையறையில் வளராமல், வீட்டிற்கு வெளியே வளர்ந்து பழகியவை. அவைகள் பெரும்பாலாக வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டவை. எனவே சிறிய நாய்கள் அல்லது பூனைகளுடன் வீட்டில் இந்த வகை நாய்களை வளர்ப்பது மிகவும் கடினம். எனவே நீங்கள் இந்திய நாட்டு நாய்களை வளர்க்க வேண்டும் என்றால் நாடோடி இனங்கள் அல்லாத நாய்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் தோபட்கர்.
மேலும், பொதுவாக இண்டி என்று அழைக்கப்படும் நாய்கள் முற்றிலும் பூர்வீக நாய்களாக இருக்காது, அவை மிகச்சிறந்த ‘இண்டாக்’ போல தோற்றமளிக்கும். “அவைகள் பெரும்பாலும் பார்க்க ஒன்று போல் தோற்றமளிக்கும். ஆனால் ஒரு நகர நாய் ஒரு முழுமையான தூய்மையான‘ INDog ’ஆக இருக்க இயலாது. ஏனென்றால் சில ஆண்டுகள் கால நகர வாழ்க்கை என்பது ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் அல்லது டோபர்மேன் வெளியே சென்று தெரு நாய்க்களோடு கூடியிருக்கும். அல்லது ஒரு சிறிய இந்திய நாயுடன் ஒரு பொமரேனியன் இனச்சேர்க்கை செய்யலாம் என்று கூறுங்கள். எனவே, ஒரு இண்டி என தவறான நாய் தத்தெடுக்கப்படுவது க்ளாசிக்காக இருக்காது. இவற்றில் சிலவற்றை வளர்ப்பதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட அளவு சமூகப் பயிற்சி தேவைப்படுகிறது, ”என்று கால்நடை மருத்துவர் விளக்குகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil