Pongal recipes in tamil: பொங்கல் பண்டியை உற்சாமாகக் கொண்டாடி வரும் நாம் வித விதமாக பொங்கல் செய்து ருசித்து வருவோம். பொங்கலில் பல வகைகள் உள்ளன. இதில் வெண் பொங்கல், மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல் போன்றவை பிரபலமானவையாக உள்ளன.
அந்த வகையில், சற்று வித்தியசமான, சத்தான மற்றும் சுவையான கொத்தமல்லி பொங்கல் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவையும் மற்ற பொங்கல் போல தான். எளிதில் செய்து விடலாம். அப்படிப்பட்ட கொத்தமல்லிப் பொங்கலை செய்து அசத்த சிம்பிள் செய்முறையை இங்கு பார்க்கலாம்.

கொத்தமல்லிப் பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள்
பச்சரிசி – 250 கிராம்
பாசி பருப்பு – 150 கிராம்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
பெருங்காயம் – ½ தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – 4 கைப்பிடி
நெய் – 6 தேக்கரண்டி
முந்திரி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லிப் பொங்கல் சிம்பிள் செய்முறை
முதலில் அடி கனமான பாத்திரத்தில் 600 மில்லி தண்ணீர் ஊற்றவும்.
பிறகு, நன்றாகக் கழுவிய பச்சரிசி, பாசி பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், 3 தேக்கரண்டி நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து குழைவாக வேக வைக்கவும்.
இதன்பின்னர், வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்துக்கொள்ளவும். பின்னர் அவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
இவற்றை பொங்கலுடன் சேர்த்துக் கலந்து கொண்டு நன்றாக கிளறவும்.
இதன் பின்னர் மீதமுள்ள நெய்யில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பொங்கலில் ஊற்றிக் கிளறவும்.
இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சுவையான, சத்தான கொத்தமல்லிப் பொங்கல் தயாராக இருக்கும். இவற்றை உங்களுக்கு பிடித்த சாம்பார் அல்லது சட்னிகளுடன் சேர்த்துப் பரிமாறி ருசிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“