Poori and chapati recipe Tamil News: சமீப காலமாக சப்பாத்தி, பூரி தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு காரணமாக இவை செய்யப்படும் கோதுமை மாவில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறிப்பிடலாம். கோதுமை மாவில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்க உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இவை மிகவும் நல்லது.
நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தி மற்றும் பூரியுடன் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல வயது முதிர்ந்தவர்களுக்கும் சிறியவர்களுக்கும் ஏற்ற உணவு.
பொதுவாக நாம் சப்பாத்தி, பூரி செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. அவற்றை எவ்வாறு சாஃப்டாக எப்படி வர வைப்பது என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கு தெளிவாகவே விடையளித்துள்ளோம்.
சப்பாத்தியை சாஃப்டாக செய்வது எப்படி? சிம்பிள் செய்முறை.
சப்பாத்திக்கு மாவு தயார் செய்யும்போது அதில் ஒரு கப் கோதுமை மாவிற்கு இரண்டு ஸ்பூன் மைதா சேர்க்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால், அதைக் கொண்டு சப்பாத்தி மாவு பிசையலாம்.
பின்னர் உப்பு, சுடு தண்ணீர் சேர்த்து கரண்டியால் கிளறவும். அதன் பின் கைகளால் மாவை நன்கு பிசைந்து கொண்டு சப்பாத்தி மாவு திரட்டும் கட்டையால் 15 நிமிடங்கள் நன்கு அடிக்கவும். அப்போதுதான் தண்ணீர் நன்கு உறிஞ்சப்பட்டு மாவு மிருதுவான பதத்தில் வரும். பின்னர் அரை மணி நேரம் ஈரத்துணி போட்டு ஊற வைக்கவும்.
இப்போது உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தயார் செய்யவும். தோசைக்கல் சூடானதும் திரட்டிய சப்பாத்தியை கல்லில் போட்டு இரு புறமும் பிரட்டவும். நன்கு அழுத்தும்போது சப்பாத்தி உப்பி வரும். தேவைப்பட்டால் அரை ஸ்பூன் எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.
சாஃப்டான பூரி எப்படி செய்வது?
சாஃப்டான பூரி செய்வது ஒன்றும் மாய வித்தை அல்ல. அதற்கு நீங்கள் பூரி மாவு பிசையும் போது கோதுமை மாவோடு கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்க்க வேண்டும். அவற்றோடு பால் மற்றும் எண்ணெய் அல்லது நெய் சேர்க்க வேண்டும். நீங்கள் பால் சேர்க்கும் போது அவை அரை சூட்டில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இவை உங்கள் பூரியை மென்மையாக மாற்ற உதவும்.
மிருதுவான பூரி எப்படி செய்வது?
மிருதுவான பூரி பெற நீங்கள் தயார் செய்யும் பூரி மாவுடன் சிறிதளவு, ரவை சேர்க்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)