/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-19T204144.045.jpg)
Water poori in Tamil: பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷியாகி விடுவார்கள். அப்படிப்பட்ட இந்த பூரியை நீங்கள் எப்போவதாவது தண்ணீரில் தயார் செய்தது உண்டா?. தண்ணீரில் பூரியா! என ஆச்சரியப்பட வேண்டாம். ஆம் எண்ணெயே இல்லாமல் பச்சத் தண்ணீரில் எப்படி சுவையான பூரி தாயார் செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தண்ணீரில் பூரி செய்ய தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு – 1 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 3/4 கப்
வறுத்த வேர்கடலை தூள் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 1 டீஸ்பூன்
பாதாம் – 1 டீஸ்பூன்
திராட்சை – 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை
தண்ணீரில் பூரி செய்வது சற்றே சுலபமான முறை ஆகும். இதற்கு எப்போதும் போலவே பூரி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
முதலில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பிசைய ஆரம்பிக்கவும். தொடர்ந்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
மாவு கைகளில் ஒட்டாமல் நன்கு திரண்டு வரும் வரை உருட்டி பத்து நிமிடங்களுக்கு அப்படியே ஊற விடவும்.
இப்போது தனியாக ஒரு பாத்திரம் அல்லது பௌல் எடுத்து அதில் துருவிய தேங்காய், பொடிப் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை, ஏலக்காய் தூள் ஆகிவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ( முந்திரி, பாதாம் சேர்க்க விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக கருப்பு எள் அல்லது வெள்ளை எள் சேர்த்துக் கொள்ளலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-19T204250.720.jpg)
அதன் பிறகு பூரி மாவை வட்ட வடிவத்தில் அழகாக தேய்த்து தட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த பூரி மாவு தேய்க்கும் போது மாவு சேர்க்கக்கூடாது. அதற்கு பதிலாக சிறிதளவு எண்ணெய் மட்டும் சேர்த்து தேய்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து எல்லா உருண்டைகளையும் இதே போல் தேய்த்து தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இதன் பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பூரி செய்ய எண்ணெய் எப்படி ஊற்றிக் கொள்வோமோ அதே போல தண்ணீரை பாதி அளவிற்கு ஊற்றிக் கொள்ளவும். இப்போது அதில் ஒவ்வொரு பூரிகளாக தண்ணீரில் இட்டு வரவும்.
நீங்கள் முதலில் மாவு போடும் போது அவை தண்ணீரின் அடியில் சென்று விடும். மாவு வெந்தபின் மேலே மிதந்து வரும். அதன் பின்னர் அவற்றை திருப்பிப் போட்டுக் கொள்ளலாம். இரண்டு புறமும் நன்கு வெந்த பின்னர் அவற்றை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதே பாணியை பின்பற்றி அனைத்து பூரிகளையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது முன்பு கலந்து வைத்துள்ள தேங்காய் கலவையை பூரியின் மீது தேவையான அளவிற்கு தூவி அதனுடன் சர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை என ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளவும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-19T204224.900.jpg)
பிறகு, பூரிகளை ரோல் செய்து கொள்ளவும். இதே போல் அனைத்து பூரிகளையும் ரோல் செய்து வைக்கவும். அவற்றின் மீது வேர்கடலை தூள், அல்லது எள்ளு தூள் அல்லது தேங்காய் துருவல் சேர்த்து கார்னிஷ் செய்து கொள்ளவும்.
இந்த புதுமையான முறையைப் பின்பற்றி ஆரோக்கியமான மற்றும் சுவையான பூரிகளை செய்து உங்களுக்கு விருப்பமான சைடிஷ்களுடன் சேர்த்து சுவைக்கவும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.