Advertisment

மாவுடன் பால், நெய்… உப்பலான பூரி ரகசியம் இது தான்!

How to make crispy fluffy poori in tamil: சாஃப்டான, மற்றும் உப்பலான பூரி செய்ய ஈஸியான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Poori recipe Tamil News: How to make crispy fluffy poori in tamil

Poori recipe Tamil News: பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷியாகி விடுவார்கள். அவர்கள் சாப்பிட விரும்பும் பூரி சாஃப்டாகவும், உப்பலாகவும் இருந்தால் தான் பிடிக்கிறது. இல்லையென்றால் அவர்கள் முகம் ஏனோ கோனுகிறது. அவர்கள் விரும்பும் படியான பூரியை தயார் செய்ய இங்கு சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம். அவற்றை முயற்சி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள்.

Advertisment
  1. சாஃப்டான பூரி எப்படி செய்வது?

சாஃப்டான பூரி செய்வது ஒன்றும் மாய வித்தை அல்ல. அதற்கு நீங்கள் பூரி மாவு பிசையும் போது கோதுமை மாவோடு கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்க்க வேண்டும். அவற்றோடு பால் மற்றும் எண்ணெய் அல்லது நெய் சேர்க்க வேண்டும். நீங்கள் பால் சேர்க்கும் போது அவை அரை சூட்டில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இவை உங்கள் பூரியை மென்மையாக மாற்ற உதவும்.

  1. மிருதுவான பூரி எப்படி செய்வது?

மிருதுவான பூரி பெற நீங்கள் தயார் செய்யும் பூரி மாவுடன் சிறிதளவு, ரவை சேர்க்க வேண்டும்.

  1. எண்ணெய் கம்மியா உள்ள பூரி செய்வது எப்படி?

முதலில் நீங்கள் பூரிக்கு மாவு தயார் செய்யும் போது அவை நிலைத்தன்மையுடன் சற்று கடினமாக உள்ளது போல வைத்துக்கொள்ளவும்.

இரண்டாவதாக, பூரி சுடும் முன்னர் அந்த எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.

மூன்றாவதாக, மாவை குளிர்சாதன பெட்டியில் சுமார் 15 நிமிடங்கள் வைத்த பின்னர் பூரி சுட ஆரம்பிக்கலாம்.

  1. பொன்னிறமான பூரி எப்படி சுடலாம்?

பூரி தங்க நிறத்தில் வருவதற்கு, மாவு தயார் செய்யும் போது அவற்றுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். இவை பூரி பொன்னிறமாக தோன்ற உதவும். மேலும் பூரி சுடும் போது துருப்பிடிக்காத கரண்டியை பயன்படுத்தி, பூரி மாவை எண்ணெய்க்குள் போடும் போது அந்த கரண்டியால் அழுத்தி பிடிக்கவும். இப்போது பூரி உப்பலாகவும், பொன்னிறமாகவும் எழும்பி வரும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Healthy Food Tips Poori Lifestyle Food Recipes Healthy Life Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment