Healthy food tips in tamil: இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாக பூரி உள்ளது. இவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். ஆனால், இவை முழுக்க முழுக்க எண்ணெயில் தயார் செய்யப்படுவதால், சிலர் இவற்றை உண்ண கூடாது என்கிற நிலையும் உள்ளது.
Advertisment
தவிர, தற்போது இருக்கிற விலை வாசி உயர்வால் பல குடும்பங்களில் பூரியை தவிர்த்து விட்டு சப்பாத்திக்கு மாறி வரும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
பூரி சுட எண்ணெய் அவசியம். ஆனால், எண்ணெய் இல்லாமலும் அதே சுவையில் பூரி சுடலாம். அதுவும் தண்ணீரில். அது எப்படி சாத்தியமாகும்? என்று நீங்கள் நினைத்தால் இந்த செய்முறை உங்களுக்குத்தான்.
தண்ணீரில் பூரி சுடுவது எப்படி?
Advertisment
Advertisements
தண்ணீரில் பூரி சுடத் தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப் எண்ணெய் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு
தண்ணீரில் பூரி சுட சிம்பிள் செய்முறை
முதலில் பூரிக்கு எப்போதும் மாவு பிசைவது போல் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும். பிறகு, அதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்தும் பிசைந்து கொள்ளவும்.
பின்னர் மாவை உருண்டை பிடித்து வட்டமாக பூரி தேய்த்துக்கொள்ளவும்
இப்போது பூரி சுட வைத்துள்ள பாத்திரம் அல்லது கடாயில் பூரிக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.
தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும், பூரி மாவை அதில் போட்டுக்கொள்ளவும்.
அவை ஒருபுறம் வெந்ததும் மேலே எழும்பி வரும். பின்னர் அடுத்த பக்கம் அவற்றை திருப்பிப் போட்டுக்கொள்ளவும்.
இந்த முறையில் பூரியை ஒவ்வொன்றாக சுட்டு எடுத்ததும், அவற்றை இட்லி குக்கர் வைத்து அதற்குள் தட்டு வையுங்கள். இல்லையெனில் கடாய்க்குள் தட்டு வைத்து அதில் பூரியை அடுக்கி சூடேற்றவும். பூரி புஸ் என்று பொங்கி வரும்.
அவ்வளவுதான், நீங்கள் எதிர்பார்த்த எண்ணெய் இல்லா பூரி இப்போது தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த குருமாவுடன் சேர்த்து ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“