எண்ணெயில் கொஞ்சூண்டு உப்பு… உப்பலான சாஃப்ட் பூரிக்கு இதை ட்ரை பண்ணுங்க!
Simple tips to make Crispy and Fluffy Poori in tamil: பூரி மாவு பிசையும் போது கோதுமை மாவோடு கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். மேலும், அவற்றுடன் பால் மற்றும் எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும்.
Simple tips to make Crispy and Fluffy Poori in tamil: பூரி மாவு பிசையும் போது கோதுமை மாவோடு கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். மேலும், அவற்றுடன் பால் மற்றும் எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும்.
Poori recipes tamil: இந்திய உணவுகளில் 'பூரி' மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த சுவையான பஞ்சுபோன்ற உணவை உங்களுக்கு பிடித்த குருமாவுடன் சேர்த்து சுவைத்தால் அருமையாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
Advertisment
அவர்கள் சாப்பிட விரும்பும் இந்த பூரிகள் சாஃப்டாகவும், உப்பலாகவும் இருந்தால் தான் அவர்களுக்கு பிடிக்கிறது. இல்லையெனில் அவர்களின் முகம் ஏனோ கோனுகிறது. அப்படி அவர்கள் விரும்பும் படியான சாஃப்டான பூரியை தயார் செய்ய இங்கு சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம். அவற்றை முயற்சி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள்.
சாஃப்ட் பூரி செய்வது எப்படி?
Advertisment
Advertisements
மென்மையான மாவு தயாரிப்பது எப்படி?
சாஃப்டான பூரி செய்வது ஒன்றும் மாய வித்தை அல்ல. அதற்கு நீங்கள் பூரி மாவு பிசையும் போது கோதுமை மாவோடு கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்க்க வேண்டும். அவற்றோடு பால் மற்றும் எண்ணெய் அல்லது நெய் சேர்க்க வேண்டும். நீங்கள் பால் சேர்க்கும் போது அவை அரை சூட்டில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இவை உங்கள் பூரியை மென்மையாக மாற்ற உதவும்.
மிருதுவான பூரி எப்படி செய்வது?
மிருதுவான பூரிக்கு நீங்கள் தயார் செய்யும் பூரி மாவுடன் சிறிதளவு ரவை சேர்க்க வேண்டும். இதனால் உங்களுக்கு மொறுமொறு பூரி கிடைக்கும்.
எண்ணெய் கம்மியா உள்ள பூரி செய்வது எப்படி?
முதலில் நீங்கள் பூரிக்கு மாவு தயார் செய்யும் போது அவை நிலைத்தன்மையுடன் சற்று கடினமாக உள்ளது போல வைத்துக்கொள்ளவும்.
இரண்டாவதாக, பூரி சுடும் முன்னர் அந்த எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
மூன்றாவதாக, மாவை குளிர்சாதன பெட்டியில் சுமார் 15 நிமிடங்கள் வைத்த பின்னர் பூரி சுட ஆரம்பிக்கலாம்.
பொன்னிறமான பூரி எப்படி சுடலாம்?
பூரி தங்க நிறத்தில் வருவதற்கு, மாவு தயார் செய்யும் போது அவற்றுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். இவை பூரி பொன்னிறமாக தோன்ற உதவும். மேலும் பூரி சுடும் போது துருப்பிடிக்காத கரண்டியை பயன்படுத்தி, பூரி மாவை எண்ணெய்க்குள் போடும் போது அந்த கரண்டியால் அழுத்தி பிடிக்கவும். இப்போது பூரி உப்பலாகவும், பொன்னிறமாகவும் எழும்பி வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“