ஒவ்வொரு நாளும் மதிய உணவு சாப்பிட்ட பிறகு மிக சோர்வாக தூக்க கலக்கமாக உணர்பவர்களாக இருந்தால் கட்டாயம் இந்த சிறிய உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள். மதிய சாப்பாட்டிற்கு பிறகு உற்சாகமாக உணர்வீர்கள்.
வீடியோவில் பார்க்க:
இதை செய்து 5 நிமிடத்தில் சர்க்கரை குறைக்கலாம் | how to reduce blood sugar in 5 minutes for diabetes
இந்த மாதிரி சிறிய சிறிய உடற்பயிற்சிகளை எல்லாம் ஒவ்வொரு மதிய உணவிற்கு பிறகும் செய்தாலே போதும் உடலில் சேரும் சர்க்கரையை எரிக்க முடியும். இது மிகவும் எளிமையான உடற்பயிற்சி மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கூட இதனை செய்யலாம்.
மிகவும் எளிமையாக ஒவ்வொரு உடற்பயிற்சியையும் ஒரு 3 -5 நிமிடம் செய்தாலே போதும். இல்லையெனில் ஒவ்வொன்றையும் ஒரு 20 முறை செய்யலாம். இது மாதிரியான உடற்பயிற்சியை எந்த வயதினரும் செய்யலாம்.
தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு அரை மணி நேரம் இதுபோன்று மெதுவாக உடலை அசைப்பது இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சாப்பிட்ட பிறகு இப்படி செய்வது என்பது சற்று சிரமம் என்றாலும், வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட உதவுகிறது.
தொடக்கத்தில் மெல்ல மெல்லமாக பயிற்சி மேற்கொண்டு, பின்னர் படிப்படியாக 30 நிமிடம் வரை அதை அதிகரிக்கலாம். இன்று பலருக்கும் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் உடல் இயக்கங்கள் மிகவும் குறைவாக இருப்பது ஆகும்.
இதனால் நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதில்லை. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்கு படுத்துவதற்கு இதுமாதிரியான உடற்பயிற்சி உதவுகிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பராமரிக்கப்படுகிறது.
சாப்பிட்ட பிறகு மெதுவாக உடலுக்கு இயக்கத்தை கொடுக்கும் வகையில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது செரிமான பிரச்சனைகளை சரி செய்து மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கக்கவும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“