Advertisment

ரசம் சாதத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு வறுவல்; இப்படி செஞ்சு அசத்துங்க

Urulai Kilangu varuval recipe potato fry in tamil: சூப்பர் உருளைக்கிழங்கு வறுவல், பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
potato masala curry in tamil: simple steps to make potato fry tamil

Potato masala curry in tamil: சாதத்திற்கு ஏற்ற சைடிஷ் என்றால் உருளைக்கிழங்கு வறுவலை குறிப்பிடலாம். அதிலும் ரசம் சாதத்திற்கு அருமையாக இருக்கும். இந்த சூப்பர் உருளைக்கிழங்கு வறுவல், பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும். ரசம் சாதம் தவிர புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா வகையான கலவை சாதத்திற்கும் பொருத்தமா இருக்கும்.

Advertisment

இந்த டேஸ்டியான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உருளை கிழங்கு - 4 (பெரியது - 3/4 பதத்தில் வேக வைத்தது)
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
கருவேப்பிலை
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீ ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
வெந்தய இலை போடி - 1 ஸ்பூன்,

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த உருளை கிழங்கை 5 நிமிடத்திற்கு வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் பிரை பன்னாமல் கூட நாம் தயார் செய்யலாம்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகிவற்றை இட்டு வதக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு 3-4 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

அதன்பின்னர், கரம் மசாலா, வெந்தய இலை போடி சேர்த்து கிளறவும். தொடர்ந்து முன்னர் வேகவைத்துள்ள உருளை கிழங்கை அதில் இட்டு மசாலா நன்கு சேரும் வரை கிளறி வேக வைத்து கீழே இறக்கவும். இவற்றை ரசம் மற்றும் அனைத்து வித சாதத்தோடும் சேர்த்து சுவைத்து மகிழவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food Food Receipe Tamil Food Recipe Tamil Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment