Tamil Serial News: சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘ரோஜா’ சீரியலில் ரோஜாவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் பிரியங்கா நல்காரி. இந்த பப்ளியான நடிகைக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
நிஜத்தில் ஜாலி சீரியலில் வில்லி: பாரதி கண்ணம்மா அஞ்சலி
1994-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த இவரின் சொந்த ஊர் ஹைதராபாத். அங்கு தான் பள்ளி கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு நடனத்தில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் தனது 14-வது வயதிலேயே தெலுங்கு படத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.
அதாவது 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த திரைப்படம் ‘அந்தாரி பந்துவையா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஷர்வானந்த் சித்தார்த்தா நடிக்க, அவருக்கு ஜோடியாக பத்ம ப்ரியா நடித்திருந்தார். இப்படத்தில் மிக முக்கிய ரோலில் பத்மபிரியாவின் தங்கையாக நடித்திருந்தார் பிரியங்கா.
இதனைத் தொடர்ந்து தெலுங்கில் திலீப்பின் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில நேனே நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி. அதன் பிறகு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார்.
’ஹீரோவாவே மாறிடுவார் போல இருக்கு’ யாரை சொல்கிறார் கமல்?
,
ஆனால், பிரியங்காவுக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ரோஜா சீரியல் தான். இந்த சீரியல் மூலம் பிரியங்காவிற்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகியிருக்கிறது. வெளியில் இப்படி இருக்க, உள்ளுக்குள் பல வேதனைகளையும் அனுபவித்திருக்கிறார் பிரியங்கா. அதில் முக்கியமான ஒன்று, காதலித்தவருடன் நிச்சயதார்த்தம் நடைப்பெற்று, திருமணம் நடக்காமல் போனது தான். அந்த உறவை தக்க வைத்துக் கொள்ள தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்திருக்கிறார் பிரியங்கா. ஆனால் வெளிநாட்டில் இருக்கும் அவரது காதலரோ எதற்கும் செவி சாய்க்கவில்லையாம்.
அதனால் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வரும் பிரியங்காவிற்கு, விரைவில் நல்லது நடக்கும் என்கிறார்கள் அவரது சுற்றத்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”