Advertisment

டூ வீலர் பயணமா? உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்

பயணத்தின் முடிவில் உங்கள் இடத்தை அடைந்ததும், குளியுங்கள். உங்கள் தலைமுடியை ஷாம்பூ அல்லது கண்டிசனர் போட்டு கழுவுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy Life, Hair fall problem, honey hair mask

protect your skin and hair on your two wheeler road trip : உங்கள் தோலும் முடியும் கூட உங்கள் பயணத்தை அனுபவிக்கும் வகையில் உருவாக்கமுடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரு சக்கர வாகனத்தில் தூரத்தைக் கடக்கும் சாலை வழிப்பயணம் என்பது எப்போதுமே சிலிர்ப்பூட்டும் ஒன்றுதான். இந்தியா போன்ற ஒரு மாறுபட்ட புவியியல் நிலப்பரப்பானது, திகட்டும் அளவுக்கு பயணிகள் அலைந்து திரிவதை சாத்தியமாக்குகிறது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

ஆனால், பகலில் நீண்ட நேரம் சுட்டெரிக்கும் சூரியன், வெப்பம் மற்றும் தூசி ஆகியவை தோல் மற்றும் முடிக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என்பது நிரூபணம் ஆகிறது. எனவே, பயணதுக்காக டூ வீலரை நீங்கள் வெளியே எடுக்கும் முன்பு, உங்கள் தோலும் முடியும் கூட உங்கள் பயணத்தை அனுபவிக்கும் வகையில் சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்.

தோலின் நன்மைக்காக குளிர்காலம் குறைந்து, கோடைகாலம் தொடங்குகிறது. எந்த நேரத்திலும் சூரியனின் வெப்பம் இந்தியா முழுவதும் தாக்கும். உங்கள் தலையை வெளியே காட்டும் முன்பு, தாராளமாக சன்ஸ்கிரீன் லோசனை உங்கள் உடலில் தேய்த்துக் கொள்ளுங்கள். இது, புற ஊதா கதிர்கள் உங்கள் தோலின் நிறமி மற்றும் திசுக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உதவுகிறது.

To read this article in English

உங்கள் பயணம் நீண்டதாக இருந்தால், உங்கள் தோலின் நீர் சத்தில் இழப்பு ஏற்படும் என்பதை மறந்து விட வேண்டாம். தோலின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உங்கள் தோலினை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தோலை சுத்தப்படுத்திய பின்னர், ஈரபதத்தை மிருதுவாக்கும் பொருட்களை உபயோகிக்கலாம். உங்கள் தோலின் ஆரோக்கியத்தை புறந்தள்ளிவிட முடியாது என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உங்கள் தோலை பார்ப்பதற்கு பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொண்டால், உங்கள் பயணம் இனிமையாக இருக்கும்.

தவிர, இந்திய சாலைகள் தூசு நிறைந்தவை என்ற பெயரைப் பெற்றுள்ளன. தூசு மற்றும் எண்ணை வழியும் தோல் என்பது அபாயமான சேர்க்கையாகும். அழுக்கு, கறை ஆகியவை உங்கள் தோலில் ஒட்டக் கூடும். இவை தோலின் நுண்துளைகளை தடுக்கும். பருக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஈரமான துடைப்பான்களைக் கொண்டு செல்லவும், அடிக்கடி அதனை உபயோகிக்கவும். இதனால் தோல் கடினத்தன்மையாக இருப்பதை தவிர்க்கலாம்.

உங்கள் உதடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குளிர்ச்சியான இடங்களுக்கு பயணம் செல்வதாக திட்டமிட்டிருந்தால், சில உதட்டு தைலங்களை தேய்த்துக் கொள்ளவும். இவை உதடை ஈரப்பதமாக வைத்திருக்கும். உதட்டு தைலங்களை எப்போதும் உடன் வைத்திருப்பதும் நல்லதுதான்.

உடலின் மற்றபாகங்களைப் போல உங்கள் தோலும் சுவாசிக்க உதவுங்கள். ஒரு நீண்ட பயணம், உங்கள் தோல் உணர்வற்றுப் போன உணர்வைத் தரும். எனவே, அதிகப்படியான மேக்-அப்பை தவிர்க்கவும்.

முடியைப் பாதுகாத்தல்

சாலையில் போகும்போது, உங்கள் முடியை பின்னாமல் லூசாக விட்டுக் கொண்டு செல்வது நல்லதல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். காற்று உங்கள் முடியை முடிச்சு, முடிச்சுகளாக ஆக்கி விடும். இதனால், முடி உடையும். எனவே, உங்கள் தலைமுடியை இறுக்கமாக கட்டி முடிச்சுப் போடவும். உங்கள் கூந்தலை எப்போதுமே பின்னல் போட்டு இருப்பது எப்போதுமே நல்லது. சூரிய வெப்பம், உங்கள் முடியை பாதிக்கும், கடினமாக்கிவிடும். வெப்பத்தைத் தடுக்க முடியில் உள்ள ஈர பதத்தை தக்க வைக்கும் பொருட்களை உபயோகிக்கவும். இதனால், உங்கள் முடி வலுவாகும். பயணத்தின் முடிவில் உங்கள் இடத்தை அடைந்ததும், குளியுங்கள். உங்கள் தலைமுடியை ஷாம்பூ அல்லது கண்டிசனர் போட்டு கழுவுங்கள்.

மேலும் படிக்க : உங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா? அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா?

தமிழில் இந்த கட்டுரையை எழுதியவர் பாலசுப்ரமணி கார்மேகம்

Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment