Weight Loss Tips: எப்போதும் பச்சை காய்கறிகள், கீரைகளை மட்டுமே சாப்பிட்டு வந்தால் சலித்து விடும். ஒவ்வொரு நாளும் சுவையான ஆரோக்கியமான ரெசிபிகளை சாப்பிட்டு வந்தால் உடலிலும் ஒரு மாறுதல் ஏற்படும்.
வீட்டிலேயே சுவையான 3 பொருட்களைக் கொண்டு ’சாட்’ வகையை செய்யலாம். இதனால் நீங்கள் எதிர் பார்க்கும் உடல் எடை நிச்சயம் குறையும்.
காட்டேஜ் சீஸ், வறுத்த கடலை மற்றும் சாட் மசாலா கொண்டு ஆரோக்கியமான சாட் வகை உணவுகளை செய்யலாம்.
பனீர் மற்றும் வறுத்த கொண்டைக்கடலையில் புரதம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிடுவதால் உடலில் தேவையற்ற கலோரிகள் சேராது. பசி உணர்வை போக்கி நாள் முழுக்க நிறைவான உணர்வை தரும்.
இந்த சாட் ரெசிபிக்கு தேவையான பொருட்களை பார்ப்போம்.
தேவையானவை
வறுத்த கொண்டைக்கடலை - 50-60 கிராம்
சாட் மசாலா - 2 தேக்கரண்டி
பனீர் அல்லது காட்டேஜ் சீஸ் - 200 கிராம்
செய்முறை
பாத்திரம் ஒன்றில் பனீரை கைகளாலோ அல்லது ஃபோர்க் கொண்டோ உதிர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் வறுத்த கொண்டைக்கடலையை சேர்த்துக் கொள்ளவும். இவற்றுடன் சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த சாட் ரெசிபியுடன் நீங்கள் விரும்பும் காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். அது நார்ச்சத்தும் மிகுந்ததாக இருக்கும்.
இந்த சாட் உணவில், வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் மேலும் உடல் எடையும் குறையும்.