நோய் எதிர்ப்பு செயல்பாடு மோசமடைந்த காரணத்தால் நமக்கு அடிக்கடி நோய் தொற்றுகள் ஏற்படலாம். நம்முடைய உடலில் ஆன்டிபாடிகள் மற்றும் பிற நோய் எதிர்ப்பு பாகங்களை உருவாக்குவதில் புரதத்திற்கு முக்கிய பங்கு உண்டு. எனவே, நாம் போதுமான அளவு புரதம் எடுத்துக் கொள்ளாவிட்டால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.
நீங்கள் அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் முட்டையின் வெள்ளை கரு, மீன், சிக்கன் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். இது தவிர ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றை குறைவான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் கொழுப்புகள் அதிகம்.
சைவ உணவு சாப்பிடுபவர்கள் பாதாம் பருப்பு, வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். மேலும் சியா விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள், பருப்பு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிடுவது உங்களுக்கு தேவையான புரதத்தை வழங்கும்.
பால், பன்னீர், தயிர் போன்ற பொருள்களை தினமும் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தரக்கூடியது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“