மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி எட்டடி நீளம் கொண்ட செயற்கைக் சிட்டுக்குருவி கூடு புதுச்சேரியில் முதல் முறையாக அமைக்கப்பட்டது. இதை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று அவரது இல்லத்தில் திறந்து வைத்தார்.

இதையும் படியுங்கள்: இது தான் என் அம்மா வீடு… பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா ஹோம் டூர் வீடியோ
சிட்டுக்குருவிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சிட்டுக்குருவி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இருபதாம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி புதுச்சேரியை சேர்ந்த சிட்டுக்குருவி ஆர்வலர் இளைஞர், அருண் பசுமை இயக்கம், சிட்டுக்குருவி பாதுகாப்பு இயக்கம் தலைவர் அருண் எட்டடி நீளம் ஒரு அடி அகலத்தில் மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக் கூட்டை உருவாக்கினார். இதனை முதலமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்தார்.

இதில் பதினாறு கூடுகள் உள்ளது. கூட்டிற்கு இரண்டு குருவிகள் வீதம் 32 குருவிகள் ஒரே நேரத்தில் வசிக்க முடியும். இதனால் ஆண்டிற்கு 800 குருவிகள் இனப்பெருக்கம் ஆகும். மேலும் அருண் கடந்த 22 ஆண்டுகளாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் இதுவரை 13,000 பேருக்கு 13000 கூடுகளை வழங்கி உள்ளார்.

மேலும் புதுச்சேரி முக்கியமான இடமான தலைமைச் செயலகம் அருகிலும் கடற்கரை சாலை அருகிலும் கூண்டுகளை வைத்து சிட்டுக்குருவிகளை பராமரித்து வருகிறார். நாளை திங்கட்கிழமை சிட்டுக்குருவி தினத்தை ஒட்டி பொதுமக்களுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆழ் கடலில் பேனர் ஒன்று அருண் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியால் திறந்து வைக்கப்பட்ட அந்த சிட்டுக்குருவி கூண்டு தற்போது கோரிமேடு தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிட்டுக்குருவி பாதுகாப்பு இயக்க தலைவர் அருண் புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே பராமரிக்கப்பட்டு வரும் சிட்டுக்குருவி கூண்டுகள் அருகே இன்று பொதுமக்களுக்கு இலவசமாக சிட்டுக்குருவி கூண்டுகளை வழங்கினார். புதுச்சேரி போக்குவரத்து துறை ஆய்வாளர் செந்தில் தலைமையில் தலைமைச் செயலகம் வந்த சுற்றுலா பயணிகளுக்கு சிட்டுக்குருவி கூண்டுகளை இலவசமாக வழங்கினார்கள். புதுச்சேரியில் 2011 முதல் இந்த ஆண்டு வரை சுமார் 6 லட்சம் சிட்டுக்குருவிகள் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil