Puli Sadam Recipe in tamil: இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் உணவு கலச்சாராத்தில் பல வித உணவு வகைகள் பெருகி விட்டன. இவை தவிர பாராம்பரிய உணவுகளை மாடார்ன் உணவுகளாக மாற்றும் முயற்சிகளும் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நம்முடைய வீடுகளிலும், கிராமத்திலும் செய்யப்படும் உணவுகளின் சுவையே தனிதான்.
அந்த வகையில் நம்முடைய கோவில்களில் தயார் செய்து கொடுக்கப்படம் பொங்கல், சுண்டல் மற்றும் புளியோதரைகளுக்கேன தனித்துவமான டேஸ்ட் உண்டு. அவற்றை நாம் உண்ணும்போதே அதே போன்று நாமும் தயார் செய்ய வேண்டும் என்றும் தோன்றும். இருப்பினும் அதற்கான பக்குவம் பலருக்கு தெரியாது. அப்படி ஒரு சுவையில் எப்படி செய்து போன்று நினைத்து மனதை குழப்பி கொள்ள வேண்டாம். கோவில் ஸ்டைல் புளியோதரைக்கான பக்குவம் இதோ…
தேவையான பொருட்கள்
அரைக்க
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - காரத்திற்கேற்ப
வறுக்க
எண்ணெய்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 50 கிராம்
சமையலுக்கு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 2 ஸ்பூன்
பெருங்காயம் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5-8
கருவேப்பிலை
புளிக்கரைசல் (திக்காக)
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு
வெல்லம் - 2 ஸ்பூன்
அரிசி சாதம் - 2 கிலோ
செய்முறை
கோவில் ஸ்டைல் புளியோதரை தயார் செய்வதற்கு நமக்கு முதலில் தேவையானது புளியோதரை பொடி. எனவே அவை எப்படி தயார் செய்து கொள்ளலாம் என்பதை முதலில் பார்ப்போம்.
புளியோதரை பொடிக்கு முதலில் சிறிய பாத்திரம் அல்லது பேன் எடுத்துக் கொள்ளவும். அவை சூடானதும் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை இட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அவற்றோடு மிளகு, மல்லி, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் வறுக்கவும். தொடர்ந்து அவற்றோடு காய்ந்த மிளகாய் சேர்த்தும் வறுக்கவும். இவையனைத்தையும் வறுக்கும் போது மிதமான சூட்டை தொடரவதை கவனத்தில் கொள்ளவும். இவை நன்கு ஆறிய பிறகு மிக்சியில் இது பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் சமையல் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றோடு வேர்க்கடலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
இப்போது ஒரு தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு அவற்றோடு முன்பு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பிறகு அவற்றை ஒரு மூடியால் மூடி 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
இந்த கலவை நன்கு கொதித்த பின்னர் அவற்றோடு முன்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக்கொள்ளவும். மசாலாவை கலவை கொதித்த பிறகு தான் சேர்க்க வேண்டும். அவை நன்கு கொதித்து கீழே இறக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
இவற்றோடு இனிப்பு சுவைக்கு சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது முன்பு வடித்து வைத்துள்ள சாதத்துடன் தனியாக வறுத்து வைத்துள்ள பருப்பு கலவையை முதலில் சேர்க்கவும். பிறகு கொதிக்க வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். நாம் மிக்ஸ் செய்யும் சாதம் குழையாமல் இருப்பது அவசியமாகும்.
கலவையை நன்றாக மிக்ஸ் செய்த பின்னர் பார்த்தால் கோவில் புளியோதரை தயாராக இருக்கும். அவற்றை கோவில் அல்லது உங்கள் நண்பர்கள் மற்றும் வீட்டாரோடு பகிர்ந்து உண்டு மகிழுங்கள்!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.