குக்கரில் டேஸ்டியான புளி சாதம்: ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

bachlor puli sadam making in cooker in tamil: இது போன்ற வெரைட்டி உணவுகளை தயார் செய்வதில் பலர் கில்லியாக இருந்தாலும், சிலருக்கு அவற்றை சமைப்பதற்கான பக்குவம் சரியாக தெரிந்திருக்காது.

Puliyodharai recipe in Tamil: Puli sadam Making in cooker tamil

tamarind rice recipe in tamil: புளியோதரை, எலுமிச்சை, தேங்காய் மற்றும் தக்காளி சாதங்கள் பேச்சுலர்களுக்குகே கிடைத்த வரப்பிரசாதம் எனலாம். நொடிப்பொழுதில் தயார் செய்யப்படும் இந்த உணவுகள் பலரது பேவரேட் என்றால் நிச்சயம் மிகையாகாது. இந்த வெரைட்டி உணவுகளை தயார் செய்வதில் பலர் கில்லியாக இருந்தாலும், சிலருக்கு அவற்றை சமைப்பதற்கான பக்குவம் சரியாக தெரிந்திருக்காது.

இதற்காக தான் இன்றைய பதிவில் குக்கரில் டேஸ்டியான புளி சாதம் தயார் செய்ய சிம்பிளான செய்முறையை வழங்கியுள்ளோம்.

குக்கரில் டேஸ்டியான புளி சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:

அரிசி – 21/2 கப்,
புளி – எலுமிச்சை பழ அளவு,
வர மிளகாய் – 10,
பூண்டு – 10 பல்,
தனியா – 11/2 ஸ்பூன்,
வெந்தயம் – 1/2 ஸ்பூன்,
வெள்ளை எள் – 1/2 ஸ்பூன்,
மிளகு – 1/2 ஸ்பூன்,
கருவேப்பிலை – ஒரு கொத்து,
எண்ணெய் – 100 கிராம்,
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,
கடுகு – 1/2 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்,
வேர்க்கடலை – 2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

குக்கரில் புளி சாதம் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசியை நன்றாக அலசிக்கொள்ளவும். பிறகு அவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். இதே போல் புளியையும் 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.

இதன் பிறகு, ஒரு கடாய் எடுத்து சூடானதும் அதில் வெந்தயம் மற்றும் மிளகு சேர்த்து சில நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றுடன் தனியா, எள், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் வறுத்துக்கொள்ளவும். இவை நன்கு ஆறியதும் மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து, அடுப்பில் ஒரு குக்கர் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். அவை காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளவும். இவற்றுடன் வேர்க்கடலை, கறிவேப்பிலை மற்றும் பூண்டை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு வதக்கிக் கொள்ளவும்.

இவை நன்கு சிவந்து வதங்கியதும், அவற்றுடன் புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும். அதன் பின்னர் அரிசி வெக்கத்தேவையான தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளவும். (2 1/2 டம்ளர் அரிசிக்கு 5 டம்ளர் அளவு தண்ணீர் போதுமானது)

இந்த தண்ணீருடன்மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து குக்கரில் உள்ள புளி கரைசல் நன்கு கொதித்தவுடன் அவற்றுடன் முன்னர் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் அடிக்க விடவும்.

இப்போது குக்கரில் இருந்து பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து ஒரு கரண்டியால் சாதத்தை மிக்ஸ் செய்து விட்டால் நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் அட்டகாசமான புளியோதரை சாதம் தயாராக இருக்கும். இவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Puliyodharai recipe in tamil puli sadam making in cooker tamil

Next Story
சளி, மலச் சிக்கல்… சூப்பரான தீர்வு பூண்டு பால்!garlic milk, garlic milk benefits, garlic milk resolution, பூண்டு பால், பூண்டு பால் நன்மைகள், சளி காய்ச்சலுக்கு பூண்டு பால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூண்டு பால், garlic milk resolution for cold cough, immunity booster garlic milk, immunity bloating garlic milk, home treatment, ayurveda
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X