மாதவன் மகன் வேதாந்த்: நீச்சல் வீரரின் வெற்றி ரகசியம்; அதிகாலையில் எழுதல், கட்டுப்பாடான வாழ்க்கை முறை!

நடிகர் ஆர். மாதவன், தனது மகன் வேதாந்த் மாதவனின் ஒழுக்கமான வாழ்க்கை முறை குறித்து, ஜி.க்யூ (GQ) உடனான ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். வேதாந்த் ஒரு தேசிய அளவிலான நீச்சல் வீரர்.

நடிகர் ஆர். மாதவன், தனது மகன் வேதாந்த் மாதவனின் ஒழுக்கமான வாழ்க்கை முறை குறித்து, ஜி.க்யூ (GQ) உடனான ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். வேதாந்த் ஒரு தேசிய அளவிலான நீச்சல் வீரர்.

author-image
WebDesk
New Update
Madhavan with son Vedaant

மகனின் ஒழுக்கமான வாழ்க்கை முறை குறித்து நடிகர் ஆர். மாதவன். Photograph: (Source: Instagram/R Madhavan)

நடிகர் ஆர். மாதவன், தனது மகன் வேதாந்த் மாதவனின் ஒழுக்கமான வாழ்க்கை முறை குறித்து, ஜி.க்யூ (GQ) உடனான ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். வேதாந்த் ஒரு தேசிய அளவிலான நீச்சல் வீரர்.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருத்தல்: “ஒரு தொழில்முறை நீச்சல் வீரராக, வேதாந்தின் ஒரு நாள் இரவு 8 மணிக்கே முடிந்துவிடுகிறது. பிறகு, அவர் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் எழுந்துவிடுகிறார். அதிகாலை 4 மணி என்பது பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் எழுவது உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. இது அவனுக்கு மட்டுமல்ல, அவனுடைய பெற்றோர்களாகிய எங்களுக்கும் ஒரு கடினமான வேலைதான்” என்று மாதவன் கூறினார்.

கவனத்துடன் சாப்பிடும் பழக்கம்: “வேதாந்த் 6 அடி 3 அங்குல உயரத்தில், நீச்சல் வீரருக்கான உடலமைப்பைக் கொண்டிருக்கிறார். ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார். சாப்பிடும்போதுகூட, மெதுவாக மென்று சாப்பிடுவது, சரியான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வது என அனைத்திலும் கவனம் செலுத்துவார். அவனிடம் இருக்கும் இந்த ஒழுக்கம் என்னிடம் இல்லை. நான் மிகவும் சோம்பேறி. நான் ஒரு நடிகர் என்று கூறி அதிலிருந்து தப்பித்துவிடுகிறேன்” என்றும் மாதவன் ஒப்புக்கொண்டார்.

வேதாந்தைப் போன்றவர்களின் கட்டுப்பாடான வாழ்க்கை முறையின் நன்மைகள்

ஊட்டச்சத்து நிபுணர் கனிக்கா மல்ஹோத்ரா, இத்தகைய ஒழுக்கமான வாழ்க்கை முறையின் நன்மைகளை எடுத்துரைக்கிறார்.

Advertisment
Advertisements

மன மற்றும் உடல் ஆரோக்கியம்: அதிகாலையில் எழுந்திருப்பது ஒருவரின் உடலின் இயற்கையான உயிரியல் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது. இதனால், நல்ல தூக்கம் கிடைப்பதுடன், மூளையின் செயல்பாடுகளும் மேம்படுகிறது. இது, பதின்ம வயதினரின் மூளை வளர்ச்சிக்கும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

கவனத்துடன் உண்ணுதல்: கவனத்துடன் சாப்பிடுவது, ஊட்டச்சத்துக்களை உடல் சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் மிக அவசியம். இத்தகைய ஒழுக்கம், இளம் வயதிலேயே தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்குகிறது.

விளையாட்டு வீரர்கள் 'கவனத்துடன் உண்ணுதல்' ஏன் முக்கியம்?

கவனத்துடன் உண்ணுதல், அதாவது, மெதுவாக மென்று சாப்பிடுவது, உணவில் கவனம் செலுத்துவது போன்றவை செரிமானத்தை மேம்படுத்தி, ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலால் உறிஞ்சப்பட உதவுகிறது. இது விளையாட்டு வீரர்களின் திறனை அதிகரிப்பதற்கும், வேகமாக மீண்டு வருவதற்கும் மிக அவசியம். மேலும், பதின்ம வயதினருக்கு இது, உணவோடு ஒரு ஆரோக்கியமான உறவை வளர்த்து, மனநிலை மாற்றங்கள் மற்றும் சோர்வு போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது எப்படி?

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் பேச ஒரு சூழலை உருவாக்குவது அவசியம்.

அவர்களிடம் தொடர்ந்து பேசுங்கள்.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும்.

வீட்டுப் பொறுப்புகளையும், பழக்கவழக்கங்களையும் அவர்களுடன் சேர்ந்து தீர்மானிக்கலாம்.

விதிகளுக்கான காரணங்களை விளக்கிக் கூறுவது, குழந்தைகளிடையே சுயமரியாதையை வளர்க்கிறது. இது, ஒழுக்கத்தை ஒரு கட்டுப்பாடாகப் பார்க்காமல், தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக்கொள்ளும் ஒரு வழியாகப் பார்க்க அவர்களுக்கு உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை பொதுவெளியில் உள்ள தகவல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு புதிய பழக்கத்தையும் தொடங்குவதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

Madhavan health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: