’என் கிட்ட நிறைய குரங்கு சேட்டை இருக்கு’ பூவே உனக்காக பூவரசி

மோனிகா ப்ரீத்தி என்ற இவரை சினிமாவுக்கு வந்ததும், ராதிகா ப்ரீத்தியாக மாற்றி விட்டார்களாம் இயக்குநர்கள்.

By: Updated: October 20, 2020, 12:21:50 PM

Tamil Serial News: தமிழ் சினிமாவிலும் பெரும்பாலும் கேரளாவில் இருந்து தான் ஹீரோயின்கள் அறிமுகமாவார்கள். மற்ற மாநிலங்களில் இருந்து அறிமுகமாகும் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து வந்து, தமிழகத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார் ராதிகா ப்ரீத்தி.

மக்களுக்கு அனிதா, பிக் பாஸுக்கு சுரேஷ்.. இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார்?

இவரின் அப்பா கர்நாடகா என்றாலும் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ராதிகா, தமிழ் மொழி மீதும், தமிழ் படங்கள் மீதும் அதீத காதல் கொண்டவராக இருக்கிறார். கர்நாடகாவிலேயே பிறந்து வளர்ந்தாலும் தமிழ் நன்கு பேசுகிறார்.

Tamil Serial News, Radhika Preethi, Sun TV Poove Unakkaga Serial Poovarasi ராதிகா ப்ரீத்தி

ராதிகா நடித்த ‘Raja Loves Radhe’ என்ற கன்னடப் படம் கர்நாடகாவில் வெளியாகி வெற்றிகரமாக வாரக் கணக்கில் ஓடியது. இதையடுத்து ‘எம்பிரான்’ என்ற தமிழ்  படத்தில் அறிமுகமானார் ராதிகா ப்ரீத்தி. “என் தாய் மொழி தமிழ் என்பதால் தமிழ் படங்களில் நடிப்பதென்றால் எனக்கு மிகவும் விருப்பம். மாடர்ன் பெண் கேரக்டரில் நடிப்பேன். ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன். நல்ல கதையோடு வரும் தமிழ் இயக்குநர்களுக்காக காத்திருக்கிறேன்” எனவும் நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார்.

மோனிகா ப்ரீத்தி என்ற இவரை சினிமாவுக்கு வந்ததும், ராதிகா ப்ரீத்தியாக மாற்றி விட்டார்களாம் இயக்குநர்கள். இவர் பெங்களூருவில்தான் பள்ளிப்படிப்பையும், கல்லூரிப்படிப்பையும் முடித்தார். சம்பரம் காலேஜ் ஆப் யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பு படித்தார். ராதிகா ப்ரீத்தி ஏழாம் வகுப்பு மாணவியாக இருக்கும் போதே ஸ்போர்ட்சில் ரொம்ப பேமஸ். அவரது அழகை கண்டு ஒரு மாடலாகவே பள்ளியில் அவரை பார்த்திருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Dichikunu ichichu…????

A post shared by Radhika Preethi_official???? (@iamradhikapreethi) on

பத்தாம் வகுப்பு படிக்கும் போது நீ வருங்காலத்தில் என்னவாக போகிறாய் என்று அவரிடம் கேட்கப்பட்ட போது – “நான் ஒரு நடிகையாக போகிறேன்!” என்று சொல்லி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினாராம். கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு நடிப்புக்காக எந்தவொரு பயிற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை.

Tamil News Today Live: மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

“பை நேச்சர், நான் எப்பவும் ‘தொணதொண’ன்னு பேசிக்கிட்டே இருப்பேன். ஒரு இடத்திலே சும்மா உட்காரமாட்டேன். என்கிட்ட குரங்கு சேட்டை இருக்கு!” எனும் இவர் தான் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘பூவே உனக்காக’ சீரியலில் பூவரசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Radhika preethi sun tv poove unakkaga serial poovarasi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X