Ragi putty making in tamil: ராகி புட்டு தயார் செய்ய நாட்டு சர்க்கரை, தேங்காய், ஆகிய பொருட்கள் சேர்ப்பதால் இவை மிகவும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக உள்ளன.
Ragi putty making in tamil: ராகி புட்டு தயார் செய்ய நாட்டு சர்க்கரை, தேங்காய், ஆகிய பொருட்கள் சேர்ப்பதால் இவை மிகவும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக உள்ளன.
Ragi recipe in tamil: கேழ்வரகு அல்லது ராகி புட்டு சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த உணவாக உள்ளது. இந்த வகை புட்டு தயார் செய்வதற்கு நமக்கு 15 முதல் 20 நிமிடங்கள் போதுமானது. இவற்றை காலை அல்லது இரவு நேர உணவாகவே அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.
Advertisment
இந்த வகை புட்டை நாட்டு சர்க்கரை, தேங்காய், ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்வதால் இவை மிகவும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மாறுகிறது.
இந்த ஆரோக்கியம் மிகுந்த ராகி புட்டை எப்படி ஈஸியான முறையில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
உப்புடன் வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து, சிறிது சிறிதாக மாவு மீது தண்ணீரைத் தூவி, நொறுக்குத் தன்மையுடன் நன்கு கலக்கவும். இப்படி தயார் செய்த பிறகு புட்டு செய்ய மாவு தயராக இருக்கும்.
பின்னர், இட்லி பாத்திரத்தை தயார் செய்து கொண்டு அதில் இட்லி மாவுக்கு பதில் புட்டு இடவும். வெள்ளை துணியில் முதலில் தேங்காய் துருவல் பின்னர் மாவு, பிறகு தேங்காய் துருவல் அதன் பின் மாவு என அடுக்கடுக்காக சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்து கீழே இறக்கவும்.
இப்படி புட்டு நன்றாக வெந்த பிறகு, அவற்றோடு வறுத்த முந்திரி பருப்பு, உலர்திராட்சை மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ருசித்து மகிழவும்.