Ragi Recipe In Tamil: ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால், தினமும் காலை உணவில் ராகியை சேர்த்துக் கொள்ள வேண்டும். சரி ராகியில் எப்படி அடை செய்வது என இங்கு பார்ப்போம்.
’இப்போ இத நான் சொல்லியே ஆகணும்’: பிக் பாஸ் குறித்து பிகில் நடிகை!
தேவையானப் பொருட்கள்
ராகி (கேழ்வரகு) – 100 கிராம்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 50 கிராம்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க
பெரிய வெங்காயம் – ஒன்று
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
முருங்கை இலை – சிறிதளவு.
இந்த வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் இருந்தா பெஸ்ட்.. காரணம் வட்டி அப்படி!
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கேழ்வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
அதனுடன் சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும்.
சூப்பரான சத்தான கேழ்வரகு – பருப்பு அடை ரெடி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”