Ragi recipes tamil: நமக்கு எளிதில் கிடைக்கும் சத்தான உணவுப்பொருட்களில் கேழ்வரகு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. இவை ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தற்கும் உதவுகின்றன. மேலும், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதோடு ரத்த சோகையையும் குணப்படுத்த இவை உதவுகின்றன.
Advertisment
இப்படி எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ள கேழ்வரகில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை தயார் செய்து ருசிக்கலாம். அந்த வகையில் கீரை, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை கேழ்வரகுடன் சேர்த்து சூப்பரான ஆம்லெட் எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
கேழ்வரகு ஆம்லெட் செய்யத் தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப் ராகி மாவு - 1/4 கப் கீரை - 1/2 கட்டு பச்சை மிளகாய் - 2 இஞ்சி - சிறிய துண்டு வெங்காயம் - 1 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
கேழ்வரகு ஆம்லெட் தயார் செய்ய முதலில் கீரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு கடலைமாவு, ராகி மாவு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
தொடர்ந்து முதலில் நறுக்கிய கீரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை இந்த மாவுடன் சேர்த்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஆம்லெட்டாக ஊற்றவும்.
அவற்றை மிதமான தீயில் வேகவிட்டு திருப்பி போட்டு எடுத்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த கேழ்வரகு ஆம்லெட் தயராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த சட்னி சாம்பாருடன் பரிமாறி ருசித்து மகிழவும்.
இந்த அற்புதமான உணவை காலையில் டிஃபனாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“