Indian Railway News In Tamil: இந்திய ரயில்வே தொடர்பு (கையால் தொடுதல்) இல்லாத போர்டிங் பாஸ் மற்றும் பயணச்சீட்டு சோதனை முறையை Pryagraj சந்திப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தானியங்கி QR குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டு ஸ்கேன் செய்யும் முறையை (QR code-based ticket scanning system) உத்தரப்பிரதேச மாநிலம் Prayagraj சந்திப்பு ரயில் நிலையத்தில் செயல்படுத்தியுள்ளது. ரயில்வேயின் முதல் முயற்சியாக விமான நிலைத்தில் உள்ளது போன்ற ஒரு போர்டிங் வசதி ரயில் நிலையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என வட மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
Prayagraj சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் முதலில் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்டிங் அறைக்கு கூட்டிச்செல்லப்படுவார்கள். அங்கு நான்கு தொடர்பில்லாத செக் இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐஆர்சிடிசி-யின் iMudraவுக்கு இவ்வளவு பவரா? அடேங்கப்பா!
ஒவ்வொரு தொடர்பில்லாத கவுண்டர்களும் கண்ணாடி கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் two-way display TFT monitors நிறுவப்பட்டுள்ளது. இந்த monitor கள் ஒரு பக்கம் பயணிகளை பார்க்கும் விதத்திலும் மறுபக்கம் சோதனை செய்யும் ரயில்வே ஊழியரை பார்க்கும் விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு மற்றும் பயணிகளின் அடையாள விவரங்களை சரிபார்க்கும் விதத்தில் ஒரு webcam பயணிகள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த webcam பயணச்சீட்டை சரிப்பார்க்கும் ஊழியரிடம் உள்ள கணிணியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர் பயணிகளின் PNR ஐ webcam மூலமாகவோ அல்லது QR குறியீடு ஸ்கேனிங் முறை மூலமாகவோ சரிப்பார்ப்பார். பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர் இருவரும் பேசிக் கொள்வதற்காக இரண்டு பக்கங்களிலும் microphones மற்றும் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது.
பயணியின் அடையாளம் சரிப்பார்க்கப்பட்ட பிறகு பயணிகள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிரிண்டர் மூலமாக பிரிண்ட் செய்யப்பட்டு ஒரு போர்டிங் பாஸ் பயணிக்கு வழங்கப்படும். இதில் பெயர், PNR எண், கோச் எண், பெர்த் எண் ஆகிய தேவையான விவரங்கள் இருக்கும். இந்த போர்டிங் பாஸை பெற்ற பிறகு பயணி ரயில் நிலைய வளாகத்துக்குள் மற்றும் ரயிலின் உள் தனது அடையாள ஆவணம் மற்றும் பயணச்சீட்டுடன் நுழையலாம்.
இந்த தொடர்பில்லாத பயணச்சீட்டு சரிப்பார்க்கும் முறை மூலமாக பயணி மற்றும் ரயில்வே ஊழியர் ஆகிய இரு தரப்பும் கோவிட் -19 பரவலை தடுக்கலாம் என, வட மத்திய ரயில்வேயின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இந்தியா முழுவதும் இது போன்ற நவீனமயத்தை இனி எதிர்பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”