rana engagement pics : நடிகர் ராணா டகுபதிக்கு அவரின் காதலியான மிஹீகா பஜாஜுடன் அண்மையில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது. இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வரை கூகுளில் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டு வருகிறது. காரணம், சிம்பிள் அண்ட் அழகாக மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே காரணம்.
இதுவரை அந்த புகைப்படங்களை பார்க்காதவர்கள் அல்லது மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூகுகளில் சென்று தேட வேண்டாம்.இங்கெ பார்க்கலாம் வாங்க.
rana engagement pics : ராணாவின் கலர்ஃபுல் நிச்சயார்த்தம்!
நிச்சயதார்த்த விழாவின் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராணா மற்றும் மிஹீகா தங்களது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தனர். ராணா சிம்பிளாக ஒரு வெள்ளை சட்டை மற்றும் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார். மிஹீகா ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிற புடவையில் ஜொலித்தார். . சடங்குகள் மரபுகளின்படி நடந்தன.
ராணாவிற்கு நிச்சயார்த்த செய்தியை கேட்டு தெலுங்கு மற்றும் தமிழ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமில்லை ராணாவின் நெருக்கமான நண்பர்கள் கூட்டம் அவரை கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.
read more.. ஹீரோக்கள் செய்ய தவறியதை சாத்தியமாக்கிய ஜோ
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil