தீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா? இதற்கு இவ்வளவு விலையா?

பாலிவுட் ரசிகர் பட்டாளமே காத்திருந்த தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம் புகைப்படத்தை இருவரும் நேற்று வெளியிட்டனர். இதில் அனைவரின் கண்களும் ஒன்றையே உற்று கவனித்தது.

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா திருமணத்தை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் நேற்று முன்தினம் இத்தாலியில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் திருமணம் சிந்தி முறைப்படியும், கொங்கனி முறைப்படியும் நடைபெற்றது.

இவர்கள் திருமணத்தின் புகைப்படங்களுக்காக இவர்களின் ரசிகர்கள் தவமாய் தவமிருந்தனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் பலரும் ப்ளீஸ் ஒரே ஒரு ஃபோட்டொ போடுங்க என்று கெஞ்சும் அளவுக்கு நிலமை இறங்கியது. இதனை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கலாய்த்திருந்தார்.

ஒரே ஒரு போஸ்ட்… கொடுத்த எல்லா பில்டப் க்ளோஸ்… என்ன ஸ்மிருதி இரானி இப்படி பண்ணிட்டீங்க?

ஆனால் இந்த தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு வழியாக நேற்று இரவு தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டனர். ஒரு புகைப்படம் சிந்தி கல்யாணக் கோலத்திலும், மற்றொரு புகைப்படம் கொங்கனி கல்யாணக் கோலத்திலும் இருந்தது.

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம் ஸ்பெஷல்

கொங்கனி கல்யாணப் புகைப்படத்தில், ரன்வீர் பட்டு வேட்டி சட்டை அணிந்தும், தீபிகா சிவப்பு நிற பட்டு புடவை அணிந்தும் மகிழ்சியாக சிரித்தப்படி உள்ளனர். மற்றொரு புகைப்படம் சிந்தி முறைப்படி நடந்த திருமணம். அதில், இருவரும் சிவப்பு நிற ஆடையில் நாட்டின் இளவரசர் – இளவரசி போல இருந்தனர். இப்படியும் சொல்லலாம்… இருவரும் பன்சாலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நேராக இத்தாலிக்கு வந்தது போல் இருந்தது. அவ்வளவு பிரம்மாண்ட அலங்காரம்.

Deepika padukone - ranveer singh wedding, தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்

கொங்கனி முறை திருமணம்

இந்த புகைப்படங்களில், சிந்தி திருமணம் புகைப்படம் அனைவரையும் கவர்ந்திழுத்தது. காரணம்… தீபிகா அணிந்திருக்கும் மோதிரங்கள். இடது கையில் இருக்கும் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருந்தார். அதில் சட்டென்று கண்ணை கவர்ந்தது மோதிர விரலில் இருக்கும் அந்த பிளாட்டினத்திலான வைர மோதிரம் தான்.

Deepika padukone - ranveer singh wedding, தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்

சிந்தி முறை திருமணம்

தீபிகா விரலில் அணிந்திருப்பது ரன்வீர் பரிசளித்த நிச்சிய மோதிரம். பிளாட்டினத்தின் மேல், வைரங்களை பதித்துள்ளது. இந்த மோதிரத்தின் விலை, சுமார்  2.1 கோடி ரூபாய். திருமணத்திற்கு முன்பு நடந்த நிச்சய நிகழ்வின்போது ரன்வீர் இந்த மோதிரத்தை தீபிகாவிற்கு அணிவித்ததாக கூறப்படுகிறது.

ஃபோட்டோவை லேட்டா ரிலீஸ் பண்ணாலும், ஒரு சுவாரசியத்தை பதுக்கி வைத்தே வெளியிட்டிருக்கின்றனர். சமூக வலைத்தளம் முழுவதும் கஜா புயலுக்கு அடுத்ததாக தீப்வீர் கல்யாணப் பேச்சுதான்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close