Rasam recipe in tamil: நம்முடைய அன்றாட உணவுகளில் ரசம் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்லது. அதிலும் குறிப்பாக கொத்தமல்லிரசம் எடுத்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் ஜுரம், சளி, கபம் போன்ற பிணிகளை அண்ட விடாது.
ரசத்தில் நாம் கொத்தமல்லி சேர்ப்பதால், அவை இருமல், தலை சுற்றல் போன்ற பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றது. அதோடு சுவாசப் பிரச்சினைகளுக்கு இவை ஒரு சிறந்த மூலிகை மருந்தாகவும் செயல்படுகிறது.
இப்படி ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ள கொத்தமல்லியில் எப்படி சிம்பிளான ரசம் தயார் செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
கொத்தமல்லி ரசம் செய்யத் தேவையான பொருட்கள்

அரைக்க:
தக்காளி – 3 / 250 கிராம்
மல்லி – 2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி / 12 கிராம்
மிளகு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
பூண்டு – 2 பல் / 12 கிராம்
தாளிக்க
நல்லெண்ணெய் – 2 டீ ஸ்பூன்
நெய் – 2 டீ ஸ்பூன்
கடுகு
கொத்தமல்லி காம்பு – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 1/4 டீ ஸ்பூன்
கொத்தமல்லி ரசம் செய்முறை
முதலில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் நல்லெண்ணெய் மற்றும் நெய் இட்டு சூடேற்றவும்.
தொடர்ந்து கடுகு சேர்த்து வெடித்ததும் கொத்தமல்லி காம்பு, கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பின்னர் அவற்றை நன்கு வதக்கிய பிறகு முன்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி கொத்தமல்லி பேஸ்ட்டை சேர்க்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும். இவற்றை 3 முதல் 4 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து கீழே இறக்கவும்.
இப்போது சுவையான மற்றும் ஹெல்தியான கொத்தமல்லி ரசம் தயாராக இருக்கும். அவற்றை சூடான சாதத்துடனும், சாதாரணமாகவும் ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“