Kalyana Veetu Rasam Recipe in tamil: பாரம்பரியம்மிக்க உணவுகளை நாம் உண்ணும்போது அவை நமது கலாச்சாரத்துடன் நம்மை நெருங்கவைக்கிறது. அதோடு பருவகாலங்களில் நமக்கு கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நாம் உண்ணும்போது, நம்முடைய பண்டைய கால உணவு கலாச்சாரத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் பெரும்பகுதியாக விரும்பி உண்ணும் தென்னிந்திய உணவுகள் நிலையான ஒன்றாகவும், சுவையாக உள்ள உணவாகவும் உள்ளன.அத்தகைய பாரம்பரியம்மிக்க உணவுகளில் ரசமும் ஒன்று.
இந்த அற்புதமான ரசத்தில் கல்யாண வீடுகளில் தயாரிக்கப்படுவையின் சுவையே தனி தான். பல நூறு பேருக்கு தயாரிக்கப்படும் இந்த கமகமக்கும் கல்யாண வீடு ரசத்திற்கான எளிய செய்முறை இங்கு பார்ப்போம்.
கல்யாண வீடு ரசம் தேவையான பொருட்கள்

அரைக்க:
மிளகு – 1 ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மல்லி விதைகள் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
கருவேப்பிலை – சிறிதளவு
கமகமக்கும் கல்யாண வீடு ரசம் செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து சூடேற்றவும் அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு வறுத்து கொள்ளவும்.
அவை நன்கு ஆறிய பின்னர் அவற்றை மிக்சியில் இட வேண்டும். அவற்றோடு 7 பல் பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இதற்கிடையில், ஒரு பாத்திரம் எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை அளவு புளியை கரைத்துக்கொள்ளவும். அவற்றை இப்போது அடுப்பில் வைத்து சூடேற்றவும். புளிக்கரைசலோடு சிறிதளவு மஞ்சள் மற்றும் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
புளிக்கரைசல் 10 நிமிடங்களுக்கு நன்கு கொதித்த பின்னர் அவற்றுடன் முன்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது தனியாக ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் 4 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.
கடைசியாக 2 தக்காளிகளை சேர்த்து கொள்ளவும். அதன் பின்னர் கொத்தமல்லி தழைகளை சேர்த்து கீழே இறக்கி மூடி வைத்துக் கொள்ளவும்.
10 நிமிடத்திற்கு பிறகு அவற்றை ருசித்தாள் கல்யாண வீடு ரசம் போலவே இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil