Tamarind and Garlic Rasam in tamil: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் இருந்து வரும் நிலையில், மக்கள் கொடிய வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியமான ஒன்றாகும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்களுடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, மக்கள் தங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு கோவிட் -19 ஐ சமாளிக்க தயாராக இருப்பதை உறுதி செய்யும் வழிகளில் ஒன்றாகும்.
நமது சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் இந்திய மசாலாப் பொருட்களிலிருந்து ஒரு சுவையான ரசம் செய்முறையை இங்கு பார்க்க உள்ளோம். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவதோடு, வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு தீர்வு தருகிறது.
இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளாகியுள்ள புளி- பூண்டு ரசம் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
புளி - பூண்டு ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:-
புளி கரைசல் - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 10-12
கருப்பு மிளகு - 1-2 தேக்கரண்டி
பூண்டு - 4-5 பற்கள்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உலர் சிவப்பு மிளகாய் - 2
உப்பு - சுவைக்கு
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1 தேக்கரண்டி (புதிதாக நறுக்கியது)
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு விதைகள் - 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் 2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மிக்சியில் அரைத்து தனியாக வைக்கவும்.
பிறகு, ஒரு கடாயை எடுத்து எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய தக்காளி, மீதமுள்ள கறிவேப்பிலை, பெருங்காய தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது முன்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும். தொடர்ந்து அவற்றோடு புளி கூழ் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் ஒரு மூடியால் மூடி, குறைந்தது 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் (அல்லது நெய்) சேர்க்கவும். எண்ணெய் சூடான பிறகு, கடுகு, 1 சிவப்பு மிளகாய் மற்றும் இஞ்சி போட்டு, விதைகள் வெடிக்கத் தொடங்கும் வரை பதப்படுத்தவும்.
இப்போது கடாயில் பதப்படுத்தப்பட்ட மசாலாவை சேர்க்கவும். தீயை அணைத்து, புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். சிறிது கருப்பு மிளகு தூள் தெளிக்கவும்.
நீங்கள் இவற்றை சாதாரணமாகவும் அல்லது மதிய உணவோடும் சேர்த்து உண்ணலாம்.
பலன்கள்
ரசம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்களுக்கு பெயர் பெற்றவை. புளி, பெருங்காயம் அல்லது மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை பூஞ்சை எதிர்ப்பு குணங்களுடன் நன்மை பயக்கும். பூண்டைப் பொறுத்தவரை, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கான அதன் நன்மைகள் அறியப்படுகின்றன. இது ஜலதோஷம் உள்ளிட்ட நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.