Recipe Tamil News, Mango Jam Recipe Making video: நீங்கள் மாம்பழத்தின் பெரிய ஃபேன் என்றால், அதை ஷேக், ஸ்மூத்தி மற்றும் இனிப்பு வகைகள் என பல்வேறு வடிவங்களில் உணவில் சேர்த்திருப்பீர்கள்.
ஆனால் நீங்கள் வீட்டிலேயே மாம்பழ ஜாம் தயாரிக்க முயற்சித்தீர்களா? அதற்கு உங்களுக்கு தேவையானது பழுத்த மாம்பழம் மற்றும் சிறிது சர்க்கரை மட்டும் தான். பிரபல சமையல் கலைஞர் குணால் கபூர் தனது இன்ஸ்டாகிராமில் மாம்பழ ஜாம் செய்முறையை விளக்கியிருந்தார்.
Mango Jam Recipe Making video: மாம்பழம் ஜாம் ரெசிபி தமிழ் வீடியோ
Advertisment
Advertisements
”வீட்டில் ஜாம் செய்ய 2 பொருட்கள் மட்டும் தான் தேவை. மாம்பழத்தின் நன்மையைப் பெற இதை 100 சதவீதம் இயற்கையாக வைத்திருக்கிறேன். பிரிசர்வேட்டிவ் இல்லை, ஜெல் இல்லை” என குணால் அதற்கு தலைப்பிட்டிருந்தார்.
தேவையானப் பொருட்கள்
1 கப் - மாங்காய் (நறுக்கியது)
3 கப் - பழுத்த மாம்பழம் (நறுக்கியது)
3/4 கப் - சர்க்கரை
செய்முறை
1. ஒரு பிளெண்டரில் மாங்காய் மற்றும் பழுத்த மாம்பழத்தை சேர்த்து நன்கு அரைத்து கூழ் போல மாற்றவும்.
2. அதனை ஒரு கடாயில் மாற்றி அதில் சர்க்கரை சேர்க்கவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் நடுத்தர தீயில் கிளறவும்.
3. இப்போது மாம்பழ ஜாம் தயார். இதனை ஒரு டப்பாவில் போட்டு குளிர்விக்கவும்.